Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Monday, March 15, 2010

முன்னாள் துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும்

சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்
ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் (Robert Andrew Woolmer)

தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியதுகூடக் கிடையாது.



தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை.

பேசில் டி'ஒலிவேரா என்ற கிரிக்கெட் வீரர் தென்னாப்பிரிக்காவில் கலப்பினத்தவராகப் பிறந்தவர். மிக நன்றாகக் கிரிக்கெட் விளையாடுவார். ஆனால் முதல் தர விளையாட்டுப் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி கிடையாது. இதனால் பேசில் இங்கிலாந்து (பிரிட்டன்) நாட்டுக்குச் சென்றுவிட்டார். சில வருடங்கள் அங்கு வசித்து, குடியுரிமை பெற்று, அந்த நாட்டு அணிக்கு விளையாடத் தகுதி பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் விளையாடினார்.

1970-ல் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா செல்லவேண்டும். அந்த அணியில் பேசில் டி'ஒலிவேரா சேர்க்கப்படவில்லை! அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் உண்மையில் தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் போர்ட் பேசிலை இங்கிலாந்து அணியில் சேர்க்கக்கூடாது என்று தீவிரமாக முனைந்து எம்.சி.சியின் மனத்தை மாற்றியுள்ளது. பிற்காலத்தில் பேசில், தனக்கு நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் இங்கிலாந்தில் பெரும் எதிர்ப்பைத் தோற்றுவித்தது. பலரும் சேர்ந்து போராடி இங்கிலாந்து அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்தை ரத்து செய்யவைத்தனர்.

அதைத் தொடர்ந்து நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா தன் நிறவெறிக் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அலி பேக்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்காவின் வெள்ளை கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பணத்தைக் காண்பித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை தென்னாப்பிரிக்கா வரவழைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். அப்படியான கிரிக்கெட் போட்டிகளுக்கு 'ரிபெல் டூர்ஸ்' என்று பெயர். இப்படி ரிபெல் பயணங்களில் சென்றவர்களை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் போர்டுகள் தம் அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. சில போர்டுகள் அந்த விளையாட்டு வீரர்கள்மீது வாழ்நாள் தடையை விதித்தனர். ஆனால் சில போர்டுகள் (வெள்ளை இன நாட்டவர்...) சில வருடத் தடையை மட்டுமே விதித்தன.

1970களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து ரிபெல் பயணங்கள் நடைபெற்றன. 1980களில் இந்த ரிபெல் பயணங்களில் கறுப்பின நாடுகளும் பங்கேற்றன. உதாரணத்துக்கு இலங்கையிலிருந்து பந்துல வர்ணபுரா தலைமையில் ஓர் அணி சென்றது. மேற்கிந்தியத் தீவுகள் பக்கமிருந்தும்கூட அணிகள் சென்று அங்கு விளையாடியுள்ளன. (அதில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் (கயானா) வேகப்பந்து வீச்சாளர் காலின் க்ராஃப்டுடன் இதுபற்றி நான் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.)

நிறவெறிக் காரணத்துக்காகத் தடைசெய்யப்பட்ட ஒரு நாட்டுக்கு, பணம் காரணமாகச் சென்று கிரிக்கெட் விளையாடுவது ஒருவிதத்தில் நிறவெறிக்கு ஆதரவானது என்றுதான் கொள்ளவேண்டும். இதுபோன்ற ஒரு பயணத்தில்தான் பாப் வுல்மர் இங்கிலாந்து ரிபெல் அணிக்காக விளையாடினார். கிரஹாம் கூச், மைக் கேட்டிங் போன்ற பெரும் ஆசாமிகளெல்லாம் இந்த ரிபெல் டூர்களில் கலந்துகொண்டு மூன்று வருடம் தடையைப் பரிசாகப் பெற்று அதற்குப்பிறகு சந்தோஷமாக இங்கிலாந்துக்காக சர்வதேசக் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஆனால் பாப் வுல்மர் சுமாரான கிரிக்கெட் வீரராக இருந்ததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ரிபெல் டூருக்குப் பிறகு முடிவடைந்தது.

அதன்பிறகு அவரது பயிற்சியாளர் வாழ்க்கை ஆரம்பித்தது.
இதற்கிடையில் மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. பாப் வுல்மர் அந்தச் சமயத்தில் வார்விக்ஷயர் கோச்சாக இருந்தார். பிரையன் லாரா டர்ஹாமுக்கு எதிராக 500 ரன்கள் பெற்றது அப்போதுதான்! 1994-ல் வுல்மர் தென்னாப்பிரிக்க அணிக்குக் கோச் ஆனார்.

வுல்மர் இலங்கை அணிக்கு 'இனவெறி' காரணத்தைக் காட்டி கோச்சாக மறுத்தார் என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.

பாப் வுல்மர் நல்ல கிரிக்கெட் கோச். நல்ல மனிதர். ஆனால் நிறவெறி, இனவெறி ஆகியவற்றுக்கு ஆதரவாக, எதிராக என்றெல்லாம் மாபெரும் கொள்கைகளை அவர் வைத்திருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. அபார்த்தீட் முடிந்தபிறகு தென்னாப்பிரிக்க அணியில் முதலில் வெள்ளை நிறத்தவரே பெரும்பான்மையாக இருந்தனர். கறுப்பினத்தவர், கலப்பினத்தவர் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அலி பேக்கர் காலத்துக்குப் பிறகு இப்பொழுது கறுப்பினத்தவர் தலைமையில் அதிகமான எண்ணிக்கையில் கறுப்பர்கள் மற்றும் கலப்பினத்தவர் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடுகின்றனர்.

Bob Woolmer 001

Bob Woolmer 002

வடிவேல் ஸ்டைலில்
ஒரு வீரனை அடிச்சிருந்தா ஓகே. ஆனா நீ அடிச்சது ஒரு புள்ள பூச்சிய. அதனா
ல் உனக்கு வேல்ட்கப் இல்ல, ஒரு வெங்கல கிண்ணம் கூட கிடையாது. இதுக்கெல்லாம் ஒரு ரெஃப்ரி, 3 அம்பயர்.

Friday, February 26, 2010

100வது பதிவும், சரித்திர சாதனை நாயகனும்.

100வது பதிவும், சரித்திர சாதனை நாயகனும்.
"தமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்"
இந்த பதிவுலகத்திற்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த பகிர்வின் மூலம் பல சுவாஸ்சியமான விடயங்களை நான் கற்ற வசதியளித்துள்ளது.
எனக்கு எப்போதும் என்னை இடைபோடுவது மகிக்க விருப்பம். இதன் போது எனது பலம், பலவீனம், வாய்ப்புக்கள், அச்சுறுத்தளை நான் ஏற்ற முடியும்.

எனது முதலாவது உத்தியோக பூர்வமான பதிவை நான் April 15ம் திகதி 2009ம் ஆண்டு ஏற்றினேன். இந்தப் பதிவு தொடக்கம் 5451வருகையாளர்கள் (Flag Counter) அடிப்படையில் 20ற்கு மேற்பட்ட நாடுகளிருந்து இது வரை எனது பதிவை பார்வையிட்டுள்ளனர் இது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது.
அதிகமாகமானோர் வருகை தந்த நாடுகளின் வரிசையில் நான் !!
நினைத்துப் பார்க்கும் போது நேற்றுப் போல இருக்கிறது எனது முதல் பதிவு போட்ட நாள்.
முதல் பதிவு
நான் பதிவுலகத்துக்குள் ஒரு பதிவராக , என் வலைப்பூவை ஆரம்பித்து பத்து மாதங்கள் ஆகின்றது

தேடல்கள் மூலமா பல நண்பர்களின் வலைப்பூக்களை பார்ப்பதற்கு எனக்கு ஆர்வம் கிட்டியது. இதன் போது நான் உணர்ந்த விடயம் இத்தனை பேர் வலைப்பூக்களில் இருப்பது எனக்கு அபூர்வமாக இருந்தது. முதலில் தமிழர்களின் வலைப்பூக்களை தேடுவதில் எனக்கு ஆர்வம் கிடைத்தது இதன் விளைவாக திட்டிகள் அறிமுகமாகிது, தமிழ்ளிஸ், நிவுஸ்பண்னை, நம்குரல், தமிழ்மணம், தேன்கூடு, யாழ்தேவி போன்றன. திரட்களை வாசிப்பதில் எனக்கு தனியான தீவிர தாகம் இன்று வரை ஏற்படுத்தியது.

இந்நாளில் மகிழ்ச்சியான விஷயம் இதனை உத்தியோக பூர்வமாக தொடக்கியதுடன் இதனை பகிரங்கமாக பகிர்ந்த கொண்டிருக்கின்னேன்.

இதன் போது காரைதீவு வெப் குழுவினால் www.karaitivu.org/அதன் பெயரில் உருவாக்கினார்கள் ப்ளாக் http://premakumar.karaitivu.org/ மாற்றம் பெற்றது.
சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த ஒருவிஷயம், யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்பது. சச்சினால் மட்டுமேஎன்பதாகும்.

மேலும் சச்சின் பட இணைப்புக்கு..
கிளிக்

Wednesday, February 24, 2010

சாதனை நாயகன் சச்சின் சிறப்பு

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் சச்சின் மறைவதில்லை...!

நமது சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை. ஒருநாள் ஆட்டங்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளார், அதுவும் 200*. முதல் முறையாக இரட்டை சதம் அடித்த பெருமையும் இவரை சேர்ந்துவிட்டது. தான் தான் கிரிக்கெட் உலகின் முடிசூடிய ராஜா என்று மீண்டும் அழுத்தமாக நிரூபித்துவிட்டார்.


உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த ஒரு விஷயம், யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்பது. சச்சினால் மட்டுமே இது முடியும் என்பதும் அதில் பலரது நம்பிக்கை. நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் இனிதே நிறைவேற்றியுள்ளார் அதிரடியாய், அதுவும் 147 பந்துகளில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அடித்தாடினார்.

இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவுக்குப் பிறகு, ஒரு நிஜமான சாதனையாளர் என்றால் அது டெண்டுல்கர்தான் என்பதைப் புரிய வைத்துள்ளது நேற்றைய அவரது ஆட்டம்.

166 டெஸ்டுகள், 13447 (248 அதிகபட்சம்) ரன்கள், அதில் 47 சதங்கள், 54 அரைச் சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 441 போட்டிகள் விளையாடி 17605 (200 அதிகபட்சம்) ரன்கள், அதில் 47 சதங்கள், 93 அரைச் சதங்கள்… என பிரமிக்கத்தக்க சாதனையைப் படைத்த சச்சினை, இதுவரை சர்வதேச அளவில் டான் பிராட்மேனுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்த்துவந்தது சர்வதேச மீடியா.

ஆனால் 36 ஆண்டுகளாக சர் விவியன் ரிச்சர்ட்ஸ், லாரா போன்ற பெரும் வீரர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாத இரட்டைச் சத சாதனையை, தனது 36-வது வயதில் சாதித்துக் காட்டிய பிறகு, டான் பிராட்மேனுக்கு நிகராக டெண்டுல்கரை வைத்துக் கொண்டாடுகிறார்கள் நிபுணர்கள்.

இனி கிரிக்கெட் என்றால், டான் பிராட்மேன் பெயரோடு சேர்ந்தே நினைவுக்கு வருவது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும்தான்.

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் தொடரும்....

Tuesday, February 23, 2010

இ.எஸ்.பி.என் கிரிக்கெட் இன்போ விருது 2009

இ.எஸ்.பி.என். - கிரிக் இன்ஃபோ வழங்கும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் விருது சேவாகிற்கும், ஒரு நாள் போட்டியில் சிறந்த இன்னிங்ஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கும் கிடைத்துள்ளது.

மும்பையில் இலங்கை அணிக்கு எதிராக ஒரே நாளில் 293 ரன்களை விளாசிய சேவாகின் அந்த இன்னிங்ஸ் 2009ஆம் ஆண்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று இயன் சாப்பல், மஞ்சுரேக்கர், உள்ளிட்ட நிபுணர்கள் குழு முடிவு செய்து விருதிற்கு சேவாகை தேர்வு செய்தது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் எடுத்த 161 ரன்களும், கிறிஸ் கெய்ல் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்த பொறுமையான 165 ரன்களும் சேவாகின் தேர்வுக்கு சவாலாக இருந்தன. ஆனால் இறுதியில் சேவாகின் 293 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கிறிஸ் கெய்ல் எடுத்த 50 பந்து 88 ரன்கள் சிறந்த இருபது ஓவர் கிரிக்கெட் இன்னிங்ஸாக தேர்வு செய்யப்பட்டது.

சக மேற்கிந்திய வீரர் ஜெரோம் டெய்லர் இங்கிலாந்தை 59 ரன்களுக்கு சுருட்டி அதிர்ச்சி வெற்றி பெற்ற பந்து வீச்சு ஆண்டின் சிறந்த பந்து வீச்சு விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் ஆடிய ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஆண்டின் சிறந்த ஒரு நாள் பேட்டிங் இன்னிங்ஸ் என்று முடிவு செய்யப்பட்டது.

சேவாக் தொடர்ச்சியாக சிறந்த பேட்டிங்கிற்கான விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடர் முதல் போட்ட்யில் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஷாகித் அஃப்ரீடியின் இந்த பந்து வீச்சு சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் பந்து வீச்சாக விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த இருபது ஓவர் கிரிக்கெட் பந்து வீச்சாளராக பாகிஸ்தானின் உமர் குல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விருதுப் பட்டியலைத் தேர்ந்தெடுத்தக் குழுவில் இருந்த ஜெஃப் பாய்காட், சேவாகைப் பற்றி புகழ்ந்து கூறுகையில்,

"அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது அபாரமான உணர்வு ஏற்படுகிறது நான் வேகமாகவும் அதே வேளையில் மிகப்பெரிய இன்னிங்ஸ்களையும் விளையாடும் ஓரிருவரை நான் பார்த்திருக்கிறேன்." என்றார். ஆனால் இதில் பலர் வெறும் தாக்குதல் ஆட்டமாகவே இருக்கும், ஆனால் சேவாகிடம் அம்மாதிரி இல்லை, அவர் எளிமையாகவே ஆடுகிறார். நான் அவர் பேட் செய்வதைப் பார்க்கும் போது, பந்து வீச்சாளர் வீசுவதற்கு முன்னரே அவர் தன் ஷாட்டை பார்த்து விடுகிறார் என்று தோன்றுகிறது. இது மிகவும் அசாதாரணத் திறமை. அவர் ஷாட்களை மிகுந்த பலத்துடன் கூட அடிப்பதில்லை, அவர் நல்ல டைமிங்கையும், பெரிய முயற்சியில்லாத எளிமையையும் கொண்டுள்ளது அவரது ஆட்டம், மேலும் அவரிடம் உள்ள ஷாட்கள்தான் எத்தனை! என்று புகழாரம் சூட்டினார் பாய்காட்.

இந்த சிறந்த இன்னிங்ஸ், பந்து வீச்சு விருதுகளைத் தவிர, கிரிக் இன்ஃபோ ஸ்டாட்ஸ் குரு விருதுகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கவுதம் கம்பீர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மென் விருதையும் சேவாக் சிறந்த ஒரு நாள் பேட்ச்மென் விருதையும் பெற்றனர்.

பந்து வீச்சு விருது ஸ்டூவர்ட் பிராட், மிட்செல் ஜான்சன், ஆகியோருக்கும் சிறந்த ஒரு நாள் பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

மற்றும் ஷேன் வாட்சன், தில்ஷான், பிரண்டன் மெக்கல்லம், ஜெஸ்ஸி ரைடர் ஆகியோரும் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.Best Test Batting Performance:

Best Test Batting Performance:
Virender Sehwag-293 v Sri Lanka, Mumbai

Best Test Bowling Performance
Jerome Taylor-5 for 11 v England, Kingston

Best ODI Batting Performance
Sachin Tendulkar-175 v Australia at Hyderabad

Best ODI Bowling Performance
Shahid Afridi-6 for 38 v Australia at Dubai

Best Twenty20 Batting Performance
Chris Gayle- 88 v Australia at The Oval

Best Twenty20 Bowling Performance
Umar Gul-5 for 6 v New Zealand at The Oval

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!