நமது சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை. ஒருநாள் ஆட்டங்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளார், அதுவும் 200*. முதல் முறையாக இரட்டை சதம் அடித்த பெருமையும் இவரை சேர்ந்துவிட்டது. தான் தான் கிரிக்கெட் உலகின் முடிசூடிய ராஜா என்று மீண்டும் அழுத்தமாக நிரூபித்துவிட்டார்.
இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவுக்குப் பிறகு, ஒரு நிஜமான சாதனையாளர் என்றால் அது டெண்டுல்கர்தான் என்பதைப் புரிய வைத்துள்ளது நேற்றைய அவரது ஆட்டம்.
166 டெஸ்டுகள், 13447 (248 அதிகபட்சம்) ரன்கள், அதில் 47 சதங்கள், 54 அரைச் சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 441 போட்டிகள் விளையாடி 17605 (200 அதிகபட்சம்) ரன்கள், அதில் 47 சதங்கள், 93 அரைச் சதங்கள்… என பிரமிக்கத்தக்க சாதனையைப் படைத்த சச்சினை, இதுவரை சர்வதேச அளவில் டான் பிராட்மேனுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்த்துவந்தது சர்வதேச மீடியா.
ஆனால் 36 ஆண்டுகளாக சர் விவியன் ரிச்சர்ட்ஸ், லாரா போன்ற பெரும் வீரர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாத இரட்டைச் சத சாதனையை, தனது 36-வது வயதில் சாதித்துக் காட்டிய பிறகு, டான் பிராட்மேனுக்கு நிகராக டெண்டுல்கரை வைத்துக் கொண்டாடுகிறார்கள் நிபுணர்கள்.
இனி கிரிக்கெட் என்றால், டான் பிராட்மேன் பெயரோடு சேர்ந்தே நினைவுக்கு வருவது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும்தான்.சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் தொடரும்....
Thanks 4 the Share.
ReplyDeleteசச்சின் - தனது மனைவி, குழந்தைகளுடன் - Sachin Tendulkar Rare Picture Collections