Tuesday, February 23, 2010

இ.எஸ்.பி.என் கிரிக்கெட் இன்போ விருது 2009

இ.எஸ்.பி.என். - கிரிக் இன்ஃபோ வழங்கும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் விருது சேவாகிற்கும், ஒரு நாள் போட்டியில் சிறந்த இன்னிங்ஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கும் கிடைத்துள்ளது.

மும்பையில் இலங்கை அணிக்கு எதிராக ஒரே நாளில் 293 ரன்களை விளாசிய சேவாகின் அந்த இன்னிங்ஸ் 2009ஆம் ஆண்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று இயன் சாப்பல், மஞ்சுரேக்கர், உள்ளிட்ட நிபுணர்கள் குழு முடிவு செய்து விருதிற்கு சேவாகை தேர்வு செய்தது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் எடுத்த 161 ரன்களும், கிறிஸ் கெய்ல் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்த பொறுமையான 165 ரன்களும் சேவாகின் தேர்வுக்கு சவாலாக இருந்தன. ஆனால் இறுதியில் சேவாகின் 293 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கிறிஸ் கெய்ல் எடுத்த 50 பந்து 88 ரன்கள் சிறந்த இருபது ஓவர் கிரிக்கெட் இன்னிங்ஸாக தேர்வு செய்யப்பட்டது.

சக மேற்கிந்திய வீரர் ஜெரோம் டெய்லர் இங்கிலாந்தை 59 ரன்களுக்கு சுருட்டி அதிர்ச்சி வெற்றி பெற்ற பந்து வீச்சு ஆண்டின் சிறந்த பந்து வீச்சு விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் ஆடிய ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஆண்டின் சிறந்த ஒரு நாள் பேட்டிங் இன்னிங்ஸ் என்று முடிவு செய்யப்பட்டது.

சேவாக் தொடர்ச்சியாக சிறந்த பேட்டிங்கிற்கான விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடர் முதல் போட்ட்யில் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஷாகித் அஃப்ரீடியின் இந்த பந்து வீச்சு சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் பந்து வீச்சாக விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த இருபது ஓவர் கிரிக்கெட் பந்து வீச்சாளராக பாகிஸ்தானின் உமர் குல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விருதுப் பட்டியலைத் தேர்ந்தெடுத்தக் குழுவில் இருந்த ஜெஃப் பாய்காட், சேவாகைப் பற்றி புகழ்ந்து கூறுகையில்,

"அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது அபாரமான உணர்வு ஏற்படுகிறது நான் வேகமாகவும் அதே வேளையில் மிகப்பெரிய இன்னிங்ஸ்களையும் விளையாடும் ஓரிருவரை நான் பார்த்திருக்கிறேன்." என்றார். ஆனால் இதில் பலர் வெறும் தாக்குதல் ஆட்டமாகவே இருக்கும், ஆனால் சேவாகிடம் அம்மாதிரி இல்லை, அவர் எளிமையாகவே ஆடுகிறார். நான் அவர் பேட் செய்வதைப் பார்க்கும் போது, பந்து வீச்சாளர் வீசுவதற்கு முன்னரே அவர் தன் ஷாட்டை பார்த்து விடுகிறார் என்று தோன்றுகிறது. இது மிகவும் அசாதாரணத் திறமை. அவர் ஷாட்களை மிகுந்த பலத்துடன் கூட அடிப்பதில்லை, அவர் நல்ல டைமிங்கையும், பெரிய முயற்சியில்லாத எளிமையையும் கொண்டுள்ளது அவரது ஆட்டம், மேலும் அவரிடம் உள்ள ஷாட்கள்தான் எத்தனை! என்று புகழாரம் சூட்டினார் பாய்காட்.

இந்த சிறந்த இன்னிங்ஸ், பந்து வீச்சு விருதுகளைத் தவிர, கிரிக் இன்ஃபோ ஸ்டாட்ஸ் குரு விருதுகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கவுதம் கம்பீர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மென் விருதையும் சேவாக் சிறந்த ஒரு நாள் பேட்ச்மென் விருதையும் பெற்றனர்.

பந்து வீச்சு விருது ஸ்டூவர்ட் பிராட், மிட்செல் ஜான்சன், ஆகியோருக்கும் சிறந்த ஒரு நாள் பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

மற்றும் ஷேன் வாட்சன், தில்ஷான், பிரண்டன் மெக்கல்லம், ஜெஸ்ஸி ரைடர் ஆகியோரும் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.Best Test Batting Performance:

Best Test Batting Performance:
Virender Sehwag-293 v Sri Lanka, Mumbai

Best Test Bowling Performance
Jerome Taylor-5 for 11 v England, Kingston

Best ODI Batting Performance
Sachin Tendulkar-175 v Australia at Hyderabad

Best ODI Bowling Performance
Shahid Afridi-6 for 38 v Australia at Dubai

Best Twenty20 Batting Performance
Chris Gayle- 88 v Australia at The Oval

Best Twenty20 Bowling Performance
Umar Gul-5 for 6 v New Zealand at The Oval

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!