Showing posts with label காரைதீவு. Show all posts
Showing posts with label காரைதீவு. Show all posts

Monday, July 19, 2010

முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில் தமிழ்ச் செம்மொழி விழா

முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில்
தமிழ்ச் செம்மொழி விழா
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ......



கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழாவையொட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகமும் கண்ணகி சனசமுக நிலையமும் இணைந்து விபுலானந்தர் ஊர்தியொன்றை இன்று கல்முனைப் பிரதேசமெங்கும் செலுத்தியது. ஊர்தியானது காரைதீவு விபுலானந்தா மணிமண்டப முன்றலில் வைத்து இகிமிசன் பிரமுகர் பொ.சிவயோகள் தீபாராதனை காட்டி ஆரம்பித்துவைப்பதையும் ஊர்தியையும் பதாதைகள் பறப்பதையும் படங்களில் காணலாம்.


கிழக்குமாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா தொடர்பான கல்முனை வலய ஆலோசனைக்கூட்டம் காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது தமிழ் செம்மொழி விழா பதாதை பறப்பதையூம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகுப்பிள்ளை உரையாற்றுவதையூம் கல்முனைவலய ஏற்பாட்டுக்குழுவினர் அமர்ந்திருப்பதையூம் படங்களில் காணலாம்.
Thanks : www.karaitivu.org
மேலும் பார்க Clickhere

Monday, June 28, 2010

சுவாமி விபுலாநந்தரின் இன்மலர்கள்

அடியேன் பெற்ற இன்பம் நண்பர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்கே இடுகிறேன்.
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.


மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.


பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா?
உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது



Friday, March 19, 2010

2வது பிறந்தநாள் கொண்டாட்டம்

Justify Full

2வது பிறந்தநாள் கொண்டாட்டம் Karaitivu.org

2 வது வருட நிறைவைக் கொண்டாடும் Karaitivu.org இற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று, முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது.

எனினும் தற்போது காரைதீவு எனும் பெயர் அம்பாறை மாவட்டத்துக் காரைதீவையே குறிக்கின்றது. சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர், சித்தானைக்குட்டிச் சித்தர், சிவாச் சித்தர் போன்ற ஆன்மீகப் பெரியார்கள் வாழ்ந்த பெருமைவாய்ந்த கிராமம் இக்கிராமமாகும்.

சித்தானைக்குட்டிச் சித்தர்

சிவாச் சித்தர்
இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது காரைதீவு கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும்.

எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும்.

இந்த புதிய வருடத்தில் புத்துயருடனும் புத்தாக்கத்துடனும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு வருடங்களில் பல இதயங்களில் கொள்ளை கொண்டு வீறு நடைபோடுகின்றது இந்த குறுகிய காலப்பகுதியில் குறைந்த வளங்களுடன் கம்பீரமாக வலம் வருகின்றோம்.

இந்த இணையத்தளமானது PLUS ASSOCIATION இனுடைய பன்முகப்பட்ட செயற்பாட்டு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகும். தற்பொழுது இது வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை info@karaitivu.org மின்னஞ்சல் மூலம் எங்களுடன் பகிர்ந்து ‎‎கொள்ளுங்கள்.

இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கின்ற முதல் முயற்சியே. இம் முயற்சியின் வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம்.

என்றென்றும் பிரியமான
பிரேமகுமார்

Saturday, February 20, 2010

இராட்சத வெண் சுறா (Great White Shark)

காரைதீவில் (20.02.2010) சனிக்கிழமை அகப்பட்ட 17 அடி நீளமான இராட்சத வெண் சுறா (Great White Shark) இதுவாகும்.

மக்கள் திரண்டு வந்து பார்ப்பதையும் அதனை குறுக்காக துண்டுதுண்டாக வெட்டியபோது எடுத்த ஒருதுண்டையும் படங்களில் காணலாம்.


கடல்களில் மீன் பிடிக்கும் தொழிலில்இ இயந்திர வலையிழுப்புக் கப்பல்களின் உதவியால் மிகப் பெருமளவில் மீன்கள் பிடிக்கின்றார்கள். உலகில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் டன் எடையுள்ள மீன்களைப் பிடிக்கின்றார்கள் இப்படி அளவுக்கு அதிகமாக கடல்வாழ் மீன்களைப் பிடிப்பது போலவேஇ சுறா மீன்களையும் மிக அதிக அளவில் பிடிகிக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 40 மில்லியன் சுறாமீன்களைப் பிடிக்கின்றார்கள் சுறாவின் செட்டை அல்லது மீன்சிறை மீன்சிறகு என்னும் துடுப்பு போன்ற பகுதியை மக்கள் விரும்பி உண்ணுவதால் இப்படிப் பெருமளவில் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன
  • வெண் சுறாக்கள் வெதுவெதுப்பான கடல் நீரில் ஒன்று தொடக்கம் 1280 மீற்றர் ஆழப்பகுதியில் சஞ்சாரம் செய்கின்றன.
  • இவை விரிந்து பரந்த விமையான வால்பகுதியின் துணையுடன் மணிக்கு 15 மைல் (24 கிலோ மீற்றர்) வேகமுடன் நீரில் பயணிக்க வல்லன.
  • இராட்சத வெண் சுறா பல வரிசைகளில் அமைந்த 3,000 பற்களை கொண்டன எனவும் முன் வரிசை பற்கள் சேதமடையும் வேளை பின் வரிசை பற்களை மாற்றீடு செய்யும் வல்லமை தாடைப் பகுதியில் செயற்படுகின்றதாம் (சுழற்சி முறையில் மாற்றீடு செய்யும் பொறிமுறை).
  • இரைகளை பெரிய துண்டுகளாக விழுங்கும் சுறா தனது உணவாக "கடல் சிங்கம்" போன்ற பெரிய ஒன்று சிக்கும் வேளை அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதம் உணவு ஒன்றும் சாப்பிடாது நெடுநாள் பசிகாக்குமாம்.
  • இராட்சத வெண் சுறாவின் மேல்பகுதி கறுப்பு அல்லது கடும்சாம்பல் நிறமும் கீழ்பகுதி வெள்ளையாகவும் இருக்கின்றது.
  • சுறாக்களின் நுகரும் (மோப்பம்) சக்தி அபாரமானது. இவற்றினால் ஒரு துளி இரத்தம் 100 லீற்றர் நீரில் கலந்த நிலையிலும் அடயாளம் காண வல்லனவாகவும் சிலதுளிகளை (இரத்தம்) 3 மைல்கள் (5 கிலோ மீற்றர்) தூரத்திலும் இருந்து அறியும் அபார உணர்வு கொண்டுள்ளன.
  • இராட்சத வெண்சுறா 2 அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழுவாக மட்டும் நீரில் சஞ்சரிக்கின்றன.
  • பெண் சுறாக்கள் ஆண் இனத்தினைவிடவும் உருவத்தில் (நீளம்) பெரியனவாகஇருக்கின்றன.
  • இராட்சத வெண்சுறாக்கள் தனது வாழ்நாளில் தொடர்ந்து நீந்தியவண்ணம் இருக்கும் (இறக்கைகளை அசைத்த வண்ணம்) அல்லாது விட்டால் மூழ்கிவிடும்.
  • உலகிலுள்ள 600 வகை சுறா இனங்களில் இராட்சத வெண்சுறாவும் ஒன்று.

வெண் சுறா தொடர்பிலான வீடியோ
வீடியோ 02
Great White Shark Facts

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!