Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் – திரை விமர்சனம்

 நீண்ட ஓர் இடை வேளைக்கு பின்னர் விஸ்வரூபம்.
 
 கமல் ஒரு கதக் நடனக் கலைஞர். கமலஹாசனின் மனைவியாய் வரும் பூஜா குமார் மருத்துவம் சார்ந்த அணு ஆராய்ச்சி துறையில் வேலை செய்கிறார். கமலின் நடனப்பள்ளியில் பயிலும் மாணவிதான் ஆண்ட்ரியா. கமலின் மனைவிக்கும் அவருடைய நிறுவன அதிகாரிக்கும் காதல் மலர்கிறது.


அந்த காதலை அடைவதற்கு தனது கணவனிடம் ஏதாவது குற்றத்தை கண்டு பிடிக்க ஒரு டிடெக்டிவை அனுப்புகிறார் பூஜா. அதன் பின்னர் கமல் கதக் நடனக்கலைஞர் மட்டும்  அல்ல, அவர் ஒரு இஸ்லாமியன் என்பதும் தெரிய வந்ததும் கதை சூடு பிடிக்க துவங்குகிறது. அதன் பின்னர் எதிர்களை அடித்து துவம்சம் செய்வதை பார்க்கும் பூஜா தன கணவனிடம் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதை எண்ணி வியக்கிறார். கமல் என்ற கலைஞனின் உழைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.



 இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள்.

ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான். 

முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று காட்சிகள் ஒரே ஒரு காட்சியில் வில்லன் (தலிபான் தலைவர் முல்லா ஒமர்) தமிழ்நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார்.  மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள்.   

ரூ 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதை தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான அல்லவா இது!. நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும்.

இந்த படத்தில் ஆப்கானில் அல்கொய்தா அமைப்பினர் செய்யும் கொடுமைகளையும், அமெரிக்காவின் அட்டூழியங்களையும் நன்றாகவே படம் பிடித்துக் காட்டியுள்ளார். படத்தின் காட்சியமைப்புகளும், ஒலி அமைப்புகளும்  ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது.
 
களத்தூர் கண்ணமாவில் துவங்கிய தேடல் , இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது ,கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!

Monday, July 16, 2012

பில்லா II (டேவிட் பில்லா)

பில்லா 1 படத்தின் முன்கதை என்ற அறிமுகத்துடன், மங்காத்தா வெற்றிக்குப் பின் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

அஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (ஏகன், பில்லா, மங்காத்தா முன்னையவை.
 
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போதை, போராட்டம், பேராசை,பெண்கள் என முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.
சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு, Gangster, கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சி ஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.

முகாமில் பாதுகாப்பு அதிகாரி அகதிகளுக்கு தொந்தரவு கொடுக்க அஜித் தட்டிக் கேட்கிறார். இதனால் வைரக் கடத்தல் கும்பலிடம் அஜித்தை சிக்க வைக்க நினைக்கிறார் அதிகாரி. அந்த சூழ்ச்சியிலிருந்து தப்பிக்கும் அஜித்தும் அவரது நண்பர்களும் பொறுப்பாக வைரத்தை சென்னை பார்ட்டியிடம் - இளவரசு - சேர்க்கிறார்கள்.





பில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை.. 

படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.
தனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் - பவளத்துறை நுழைகிறான். ஒரேயொரு இடத்தில் SL14xxx என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கம்  வருகிறது ஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் -  முள்ளு கம்பிகளும் , இராணுவ தளவாடங்களும் கட்டக்படுகிறது ,


அகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே? பிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை? அதன் பின் இந்திய சினிமா தமிழ் பேசப்படுகிறது .

முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள். கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். 



மதுரை பொண்ணு பாடலின் இசையை கேட்டபோது எங்கோ கேட்ட ஞாபகம் ஜெண்டில்மேன் படத்தில் வரும் ஒட்டகத்த கட்டிக்கோ பாடலில் இசையும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுபடுகிறது.

படத்தின் மிக பெரிய Plus  என்று சொன்னால் வசனம், மற்றவர் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் இன்னுமொருவர் வசனகர்த்தா இரா. முருகன் பிரபல தமிழ் எழுத்தாளர். அவரைப் பற்றி கேள்விப்படாதவர்களுக்கும் அவர் கமலின் “உன்னைப் போல் ஒருவன்” படத்துக்கு வசனம் எழுதினார்.


#ஆசை இல்லை  பசி,,
#சாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்
 
 #போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்… ஜெய்க்கிறது. ஜெய்ச்சிட்டா போராளி தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி.

#நல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம் 

#மத்தவங்களோட பயம் நம்ம பலம்
#ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது 
 #இறங்கி வேல செய்றவனுக்கும், உக்காந்து வேல வாங்குறவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
பில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்..
அஜீத் அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார் ஆழமாக, அழுத்தமாகப் பேசுகிறார்.

அஜித்தின் ஹெலிகொப்டர் risk  சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.

பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன் Ajith பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.
 # பில்லா 2  மொத்தத்தில் பில்லாவின் இரண்டாம் தரம்..  
# stylish மன்னன் :)

Tuesday, July 10, 2012

சகுனி ஆட்டம்.

நீண்ட ஓர் இடை வேளைக்கு பின்னர் ..
 
கார்த்தி-சந்தானம் கலக்கி வெளியாகியிருக்கும் படம் சகுனி ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் . ஒரு சில காட்சிகளில் அனுஸ்கா  & ஆன்ட்ரியா போன்ற பல பழம் தின்று கொட்டை, புளுக்கை போட்டவர்களை வைத்து அரசியல், மற்றும் சாமியார்களை வைத்து ஆடிய சதுரங்க ஆட்டம்தான் சகுனி! நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...

 காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.

கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் plus point selection தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு plus point இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி. 

சந்தானம் வழக்கம்போல ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை. 
 
ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை. ஒரு நடிகர் ஒரு ஹிட் கொடுத்துவிட்டால்

ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் colour full லா ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார்.  தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். ஆளும் ‘வளமாகவே’ இருக்கிறார் என்பது மேலும் சிறப்பு!
 வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது. 
கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது. 
வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.
 
 
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை.  அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.

இருப்பினும்  அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.
சகுனி ஆட்டம்  ஆரம்பம் பில்லா 2 க்கு :)
 

Saturday, June 19, 2010

ராவணன் - ஒரு இராமன்

மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மொத்த திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ராவணன்.

மணிரத்தினம் ++ ரோஜா, தளபதி++ என்று ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.

பக்பக்பக்பக்பக்... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... இப்படியாக ராவணன் படத்தின் ஒரு காட்சியில் அபாரமாக வசனம் பேசுகிறார் விக்ரம்.


வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன் இறங்குகிறார். பதினாக்கு நாட்கள் தன் பாதுகாப்பில் கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்யாவை சில பல பிரச்சனைகளூக்கு பிறகு திரும்பி அனுப்புகிறான். பிருதிவிராஜ், பதினாக்கு நாள் அவனுடன் இருந்தாயே அவனுடன் ஏதாவது என்று கேட்க, பாலிகிராப் டெஸ்ட் செய்ய சொல்லி வற்புறுத்துகிறான். மனம் ஒடிந்த ஐஸ்வர்யா வீராவை தேடி போகிறாள். நடந்தது என்ன..? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.


வீராவாக விக்ரம், அசத்தலான பாடிலேங்குவேஜ், ஐஸை கடத்தி வரும் போது இருக்கும் பரபரப்பாகட்டும், தன் மீது பயமேயில்லாமல் தன் உயிர் பற்றியும் பயம் இல்லாத பெண்ணை பார்த்து ஆச்சர்யபடும் நேரமாகட்டும், தனக்கே தெரியாமல் மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் மயங்கி, கிறங்கி போவதாகட்டும், தன்னுடன் இருந்துவிடுகிறாயா? என்று கேட்கும் இடமாகட்டும். ஐஸ் மேலிருக்கும் காதலை கண்களிலும், உடல்மொழியில் மட்டுமே வெளிப்படுத்தி அசத்துக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸில் ஐஸ் திரும்பி வந்ததும் அவர் காட்டும் எக்ஸ்ப்ரெஷன் இருக்கிறதே.. உலகத்தரம். மனுஷன் பின்னியெடுக்கிறார். ஆனால் “பக்..பக்’கென கோழி கத்துவது போலும், டண் டண் டண் என்று வாயால் ஆக்ரோஷமாய் தாளம் போடும் கேரிக்கேச்சர்கள் எடுபடவில்லை. அதெல்லாம் அவரை ஒரு டெரராக காட்ட நினைத்தது வி.இ.நீராய் தான் முடிந்திருக்கிறது.

ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது. ஆனால் அம்மணியின் பர்பார்மன்ஸில் மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது. படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணீ அதகள படுத்தியிருக்கிறார். வீராவின் இன்னொரு பக்கத்தை பார்த்து கொஞ்சம், கொஞ்சமாய் நெகிழும் இடத்தில், சாமியிடம் வேண்டிக் கொள்ளும் இடம், நெருக்கத்தில் சஞ்சலப்படும் இடம. க்ளைமாக்ஸில் நான் உன் கூட தங்கிவிட்டால் என் புருஷனை கொல்லாமல் விடுவாயா?என்று கேட்கும் இடத்தில். என்று படம் முழுவதும் இவரின் ராஜ்ஜியம் தான்.

எஸ்.பியாக பிருதிவிராஜ். ஆரம்பக் காட்சியிலிருந்தே வீராவின் மேல் வன்மத்துடன் அலைகிறார். ஒரு சில நெருக்கமான காட்சிகளில் ஐஸ்ஸுடன் குலாவுகிறார். ஐஸ்ஸை சந்தேகப்படும் காட்சியில் நச். படத்தில் பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவாளர்களின் சந்தோஷ்சிவன்/ மணிகண்டனின் கைவண்ணம். படம் முழுவதும் ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ‘உசுரே போகுதே” பாடல் எல்லார் மனதையும் உருக்க வைக்கும். ஆனால் பாடல் போஸ்ட் ஆன இடம் தான் கொஞ்சம் வழுக்கல். பின்னணி இசை நிச்சயம் பேசப்படும்.

ராமாயணத்தின் இன்ஸ்ப்ரேஷன் என்பதால் கதை பெயர் போடப்படவில்லை என்று நினைக்கிறேன். வசனம் சுஹாசினி. வழக்கமான மணி படத்தின் அளவுகளை விட அதிகமே. ஆனால் பெரிய தாக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

மணி ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல் மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை. ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட ஆரம்பிக்கும் பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி.. சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில் காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ் ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள் மணிக்கே உரித்தானது.
எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான். முதல் பாதியில் கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம் பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது.

ராமனின் மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம் வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போது சீதையான ஐஸ் கேரக்டர் தன் கணவனிடம் தன்னை பற்றி வீரா தப்பாய் சொல்லியிருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீராவை பார்க்க போனாளோ.. அப்போதே ராமன் கேரக்டரான பிரிதிவி செத்ததற்கு சமம். இதற்கு பிறகு ஐஸை தொடர்ந்து பட்டாலியனோடு வந்து கொல்வது எல்லாம்.. ம்ஹும்..

படத்தில் நாம் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணங்கள் நிறைய. முதலில் வீராவும் அவன் சார்ந்த இடமாக சொல்லப்படுகிற திருநெல்வேலி மாவட்ட, எப்போதும் மழை பெய்யும் மலை கிராமம். பின்பு அங்கு சொல்லப்படுகிற தீவிரவாத மேட்டுக்குடி, பிரச்சனைகள். கதை களமாக காட்டப்படும் இடங்கள், என்று எல்லாமே டப் செய்யப்பட்ட படம் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. நிச்சயம் இப்படட்தை ஹிந்தியில் பார்க்கும் போது இம்மாதிரியான உணர்வு இருக்காது என்று தோன்றுகிறது.
கார்த்திக் கேரக்டர் தான் அனுமன் கேரக்டர் என்று பிரிதிவிக்கு காட்டில் வழி காட்டும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு ஆரம்ப காட்சியில் மரத்துக்கு மரம் தாவி காட்ட வேண்டிய நிர்பந்தம். அதை விட காமெடி ஐஸ் இருக்கும் இடத்தில் அவர் புருஷன் அனுப்பிய ஆள் அடையாள அட்டை வேண்டுமானால் காட்டுகிறேன் என்று சொல்லுமிடம், அதே போல் ப்ரியாமணியை போலீஸார் தூக்கிக் கொண்டு போகும் போது சூர்பனைகையை தான் இது என்பதை சொல்லாமல் சொல்வதை போல, “இப்ப என்ன செய்யட்டும் உன் மூக்கை அறுக்கட்டுமா” என்று போலீஸ் பேசும் வசனம் எல்லாம் மணி சார்.. உங்களிடமிருந்தா..?

அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும் ஸ்ட்ராங் டீம், என்று எல்லாம் இருந்து ஜிவன் குறைந்தே இருக்கிறான் ராவணன்
. இருந்தாலும் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.

நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்.

Friday, April 30, 2010

அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை சுறா

சுறா- பட விமர்சனம்

எப்படியாப்பத்ட் பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.



விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.



தேவ் கில்
வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
மணிசர்மா
மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.


இதனை விட்டு அடுத்த படத்திற்கு தயார் 'காவலரன்'

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!