அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று, முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது.
எனினும் தற்போது காரைதீவு எனும் பெயர் அம்பாறை மாவட்டத்துக் காரைதீவையே குறிக்கின்றது. சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர், சித்தானைக்குட்டிச் சித்தர், சிவாச் சித்தர் போன்ற ஆன்மீகப் பெரியார்கள் வாழ்ந்த பெருமைவாய்ந்த கிராமம் இக்கிராமமாகும்.
சித்தானைக்குட்டிச் சித்தர்
சிவாச் சித்தர்இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது காரைதீவு கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும்.
எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும்.
இந்த புதிய வருடத்தில் புத்துயருடனும் புத்தாக்கத்துடனும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு வருடங்களில் பல இதயங்களில் கொள்ளை கொண்டு வீறு நடைபோடுகின்றது இந்த குறுகிய காலப்பகுதியில் குறைந்த வளங்களுடன் கம்பீரமாக வலம் வருகின்றோம்.
இந்த இணையத்தளமானது PLUS ASSOCIATION இனுடைய பன்முகப்பட்ட செயற்பாட்டு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகும். தற்பொழுது இது வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை info@karaitivu.org மின்னஞ்சல் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கின்ற முதல் முயற்சியே. இம் முயற்சியின் வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம்.
என்றென்றும் பிரியமான
பிரேமகுமார்
No comments:
Post a Comment