Thursday, July 22, 2010

இலங்கையின் முடிசூடா மன்னன்.

இலங்கையின் முடிசூடா மன்னன்.
முரளிதரன் ஒரு பார்வை....

டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இவரது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க, காலே டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.

முரளி சாதனை: தனது கடைசி டெஸ்ட் போட்டியில், புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் (முதல் இன்னிங்ஸ் -5, இரண்டாவது இன்னிங்ஸ் -3) கைப்பற்றிய இவர், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். காலே டெஸ்டின் கடைசி நாளான நேற்று, கடைசி விக்கெட்டான இந்தியாவின் பிரக்யான் ஓஜாவை அவுட்டாக்கிய இவர், இந்த இலக்கை எட்டினார்.

7 வது முறை: போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

சோதனைகள், சாதனைகள் பல....:

* டெஸ்ட் (133 போட்டி, 800 விக்.,) மற்றும் ஒரு நாள் அரங்கில் (337 போட்டி, 515 விக்.,) அதிக விக்கெட்டுகள்.

* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (67) 5 விக்கெட்டுகள் . * டெஸ்ட் போட்டிகளில், அதிக முறை (22) 10 விக் கெட்டுகள். * டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒவ் வொரு அணிக்கு எதிராகவும் 50 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்தி சாதனை. * டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் (10) விருது


132 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெட்களை சாய்த்துள்ளார். முதல் தர போட்டிகளில் 1366 விக்கெட்களையும் அவர் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நினைவுப் பரிசு வழங்கிய ஐனாதிபதி :
முரளிதரன் உலக சாதனையோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதையொட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதை இலங்கை ஐனாதிபதி ராஜபக்சே நேரில் வந்து வழங்கி முரளிதரனைப் பாராட்டினார். போட்டியின் இறுதி நாளில் அவர் மைதானத்திலிரு்நது வந்திருந்து போட்டியையும் பார்த்தார்.

விடைபெற்றார் முரளிதரன்
இந்தப் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் முரளிதரன். போட்டியின் முடிவில் அவர் பேசுகையில், தனக்கு ஆதரவாக இருந்த இலங்கை ஐனாதிபதி ராஜபக்சேவுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார். மேலும், மனைவி, குடும்பத்தினர், முன்னாள், இன்னாள் வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்து விடைபெற்றார்.

1 comment:

  1. உண்மையான சாதனை மனிதன் முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!