Tuesday, August 3, 2010

எந்திரன் விமர்சனம் (*பாடல்*)

தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ரஜினியின் எந்திரன் இசை பாடல்கள் வெளியாகிவிட்டன. பெரும்பாலானவர்கள் கேட்டும் விட்டார்கள் , பாடல்கள் மக்களை எந்த அளவுக்கு கவர்ந்துள்ளது என்பதைப்பார்க்கலாம்.

சி.டியில் மொத்தம் 7 பாடல்கள். இவற்றில் 6 முழு பாடல்கள். ஒன்று மட்டும் யோகி.பி, பிரவீண் மணியின் ராப் பாடல்.


‘புதிய மனிதா… பூமிக்கு வா…’ என்ற வைரமுத்துவின் பாடலுடன் ஆரம்பிக்கிறது ஆல்பம்.

**************
**************
ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மகள் கதீஜா குரல்களில் மெதுவாக ஆரம்பிக்கும் அந்தப் பாட்டு, ‘நான் கண்டது ஆறறிவு, நீ கண்டது பேரறிவு…’ என எஸ்.பி.பியின் குரலுக்கு தாவியதும் உச்சத்துக்குப் போகிறது, நாடி நரம்புகளை முறுக்கேற்றும் விதத்தில். முதல் முறை கேட்கும் போதே உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது.
அடுத்த பாடல் ஒரு அழகான டூயட். ‘காதல் என்பது…’ எனத் துவங்கும் இந்தப் பாடலை விஜய் பிரகாஷ்-ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும் போது பெரிதாக ஈர்க்கவில்லை!

‘இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே…’ பாடலை கார்க்கி எழுதியுள்ளார். இதற்குத்தான் பெரிய அளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், ‘பரவாயில்லை கேட்கலாம்….’ எனும் அளவுக்குத்தான் இந்தப் பாடல் உள்ளது.

‘அரிமா அரிமா…’ அடுத்த அட்டகாசம். பின்னி எடுத்திருக்கிறார்கள் இசையமைப்பாளரும் பாடியவரும் எழுதியவரும். வரிக்கு வரி அசத்தல். பாடலின் கம்பீரம் மீண்டும் மீண்டும் கேடகேட்கத் தூண்டுகிறது.

‘உன்னைப்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா…’ என்ற வரிகளை ஹரிஹரன் பாடும் ஸ்டைல் செம கிக்.

இந்த ஆல்பத்தின் உச்சப் பாட்டு என்றால் அது கிளிமாஞ்சாரோ…தான். மனசைத் துள்ள வைக்கும் மெட்டு. அந்த மெட்டை இருமடங்கு தூக்கிக் கொடுக்கும் பா.விஜய்யின் பாடல் வரிகள். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் ஜாவேத் அலியும் சின்மயியும் பாடியிருக்கும் விதம். அட்டகாசமான, பழங்குடி டைப் பாட்டு.

இந்த ஆல்பத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இதுவே. ரசிகர்களால் அதிக அளவு காலர் ட்யூனாக தேர்வு செய்யப்பட்ட பாட்டும் இதுதான் என்பது கூடுதல் தகவல்.

கடைசி பாட்டு ‘ரோ ரோ ரோபோடா…’. பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடல் இல்லை. வெறும் விஞ்ஞான வார்த்தைகளைப் போட்டு நிரப்பினால் மட்டும் போதாததல்லவா….

மொத்தத்தில் ஒரிரு பாடல்கள் ஏமாற்றம் தந்தாலும், கிளிமாஞ்சாரோ, அரிமா அரிமா, புதிய மனிதா போன்ற கலக்கல் பாடல்களுக்காக கட்டாயம் ஒரிஜினல் சி.டி வாங்கியே கேட்கலாம்.

ஏ.ஆர்.ஆர் இசை வழக்கமாகவே மக்களிடையே கொஞ்சம் மெதுவாகத்தான் ஊடுருவும் இதும் அப்படியே.. பின்ணணி இசை முழுக்க முழுக்க புது வடிவத்துடனே இருக்கிறது..


1 comment:

  1. அரிய தகவலை தந்தமைக்கு நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!