Friday, February 26, 2010

எடிசன் விருது விழா 2010

எடிசன் தமிழ் திரைப்பட விருதுகள் 2010
ஆண்டுதோறும் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் ஒன்றுஎடிசன் விருது.
இவ்விருது தமிழ் திரைப்பட நடிகர்/ நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பின்னனிபாடகர்கள், பாடலாசிரியர்கள், சண்டைப்பயிற்சியர்கள், நடன ஆசிரியர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், கலைஇயக்குனர்கள் மேலும் பல திரைப்பட நட்சத்திரங்கள் என அனைத்துபிரிவினர்க்கும் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுவழங்கப்படுகிறது.

இத்தேர்வு அயல்நாட்டில் உள்ள தமிழ் தொலைகாட்சிகள், வானொலிபன்பலைகள், இணையதளங்கள், எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு செய்து, விருதுவழங்கபடுகிறது. இதில் சிறப்பு அம்சமாக அயல்நாட்டு நடிகர், நடிகைகள், தமிழ்திரையுலகின் துணைநடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் எடிசன் விருது இம்முறை நடிகர் ஜெயம் ரவி,ஸ்னேகா, பிரசன்னா உள்ளிட்ட கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.


சிறந்த தேச பக்திப் படத்துக்கான எடிசன் விருதை எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' திரைப்படம் பெற்றது.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த தேசபக்தி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஸ்னேகா வழங்க அந்த விருதை ஜெயம் ரவி பெற்றுக் கொண்டார்.
'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துக்காக சிறந்த நடிகை விருதினை ஸ்னேகா பெற்றுக் கொண்டார். இந்தப் படத்தின் நாயகன் பிரசன்னாவுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.


சிறந்த இயக்குநருக்கான விருது அயன் படத்துக்காக இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை ஆர்த்தி பெற்றுக் கொண்டார். வாழ்நாள் சாதனையாளர்கள் விருது நடிகை மனோரமாவுக்கும் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் வழங்கப்பட்ட பிற விருதுகள்:

சிறந்த நடிகர்- விக்ரம். சிறந்த நடிகை - தமன்னா. சிறந்த வில்லன் - தேவராஜ் (யோகி), குணச்சித்திர நடிப்பு - கிஷோர் மற்றும் அம்பிகா (வெண்ணிலா கபடி குழு மற்றும் மரியாதை). புதுமுக நடிகை - ஷம்மு. புதுமுக நடிகர் - ஜானி (ரேணிகுண்டா). சிறந்த ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்ஸா (ஈரம்). சிறந்த பாடகர் -கிரிஷ், சிறந்த பாடகி -சின்ன பொண்ணு, சிறந்த மக்கள் தொடர்பாளர் - டைமண் பாபு, சிறந்த பாடலாசிரியர்கள் - நா முத்துக்குமார், வி இளங்கோ (குளிர்), நெல்லை பாரதி (பட்டாளம்) மற்றும் பாலபாரதி (மதுர திமிரு).

இந்நிகழ்ச்சிக்கு அயல்நாடுகளின் தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகிகள்/ தயாரிப்பாளர்கள்/ தொழில் அதிபர்கள்/ அயல்நாட்டு அரசு தூதர்கள் நிகழ்ச்சியில்கலந்து கொள்ள உள்ளன.
7 நாட்டு தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் விருது இது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!