Thursday, December 3, 2009

தல இனி "அசல்" ஆனால் அட்டகாசம்

'அசல்'
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்குவதாக இருந்தது. கௌதமின் பிரிவிற்கு பிறகு தரணி, விஷ்ணுவர்தன் என பல இயக்குனர்களை அணுகியுள்ளனர். ஆனால் அனைத்துமே பேச்சுவார்த்தையுடன் நின்றுபோனது. இப்போது இறுதியில் இயக்குனர் சரணை புக் செய்துள்ளனர். படத்தின் பெயரையும் முடிவுசெய்துவிட்டனர். 'அசல்' என ரிஜிஸ்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவா‌ஜி பிலிம்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது. முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த பரத்வா‌ஜ் நான்காவது முறையாக அ‌ஜித், சரண் கூட்டணியுடன் ஒன்றிணைகிறார். அ‌ஜித் ஜோடியாக சமீராரெட்டி மற்றும் பாவனா நடிக்கின்றனர். சரணின் பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் கருணாகரன் காஸ்ட்யூம்.படத்தில் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இப் படத்தில் பிரபல இந்தி நடிகர் சாருக் கான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.



அல்டிமேட் ஸ்டார் 'அஜித்' நடிப்பில் உருவாகும் 'அசல்' திரைப்படத்திற்காக புதிய 'முறுக்கு-மீசை' வளர்க்கிறார் அஜித். அந்த கெட்-அப்பில் அஜீத்தின் புகைப்படங்கள் கீழே..
(இவை சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது...)








அஜித்துக்கு இன்னொரு 'பில்லா'


சரண், அ‌ஜித், பரத்வா‌ஜ் கூட்டணியின் காதல்மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் அசலுக்கும் அதே கூட்டணி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது அனைவ‌ரின் விருப்பம். ரசிகர்களின் விருப்பமும் அதுதான்


ajith1
வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கிறாரோ, அந்தளவுக்கு பிரமாண்டமாக அமையும் ஹீரோவின் பராக்கிரமம்.வில்லன் தண்ணீர் என்றால் ஹீரோ தாமரை தண்டு. இந்த சூத்திரம் தெரிந்தவர் சரண்.அஜித்தை வைத்து இயக்கும் அசலில் வில்லன்களை அஜித் அளவுக்கு பலமிக்கவர்களாக செதுக்கியிருக்கிறாராம்.படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள். இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கிஇ இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார்
படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.
இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும்

ஜீத்துக்கு இப்போது ஒரு வெற்றி நிச்சயம் தேவை. அதுவும் அவரது 50 வது படம் இது, நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும். என்னுடைய வாழ்த்துக்கள் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சந்திரமுகி படம் எடுத்தப்போ, என்னைவிட அதிக டென்ஷன் ஆனவர்கள் ராம்குமார்-பிரபுதான். பாபா சரியா போகாத அந்த சூழ்நிலையில் படம் பண்ணுகிறோம். அண்ணே, இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும், நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப் படாதீங்கன்னு சொல்லி அருமையாக தயாரித்து, பிரமாண்ட வெற்றி பெற வைத்தார்கள்
அசல் படம் ரீலிஸ் ஆகவுள்ளது. அஜித் – பாவனா நடிக்கும் புதிய படம் அசல். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் முடித்துவிட்ட நிலையில் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார்கள். இதையடுத்து பொங்கலுக்கு அசல் ரீலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அசல் படம் ரீலிஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவாஜிகணேசன் நடித்த ஹிட் படங்களில் பெரும்பாலானவை குடியரசு தினத்தில் வெளியான சென்டிமெட்டில் அசல் படத்தையும் குடியரசு தினத்திலேயே ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் ராம்குமார்.

நன்றி: starajith

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!