Saturday, November 28, 2009

உலகின் மிகச் சிறியவைகள் அவற்றில் சில

உலகில் மிகச் சிறிய 10 விலங்குகள்
Pygmy marmoset:

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், கம்போடியா, மற்றும் பெரு நாட்டில் காணப்படும் இந்தவகையான குரங்குகள்தான் உலகிலே மிகசிறிய குரங்கினம் ஆகும். இவை சுமார் 11 -15 cm உயரமே வளரும், வாலின் நீளம் சுமார் 17 - 22 cm மற்றும் இதனுடைய எடை 120 கிராம், இவை பிறக்கும் பொது 15 கிராம் எடையே இருக்கும். இவற்றின் ஆயுள்காலம் 11 முதல் 15 வருடங்கள் ஆகும்.கொசுறு: பிறக்கும் போது பெரும்பாலும் குட்டிகள் இரட்டை பிறவியாக (Twins) தான் இருக்கும்.

Pygmy Rabbit:
வட அமெரிக்காவில் காணப்படும் இந்தவகையான முயல்கள்தான் உலகின் மிகசிறியவகையாகும். நன்கு வளர்ந்த ஒரு முயலின் எடை 400 கிராம் தான் இருக்கும், உடலின் நீளம் சுமார் 24 முதல் 29 cm தான்.


Chihuahua:
உலகில் காணப்படும் மிகசிறிய நாயினம் இதுதான். 1850 ஆம் ஆண்டுவாக்கில் மெக்சிகோவில் உள்ள Chihuahua மாநிலத்தில் கண்டுபிடிக்கபட்டது. இவை 6 - 9 இன்ச் உயரமும் 2 முதல் 12 பவுண்ட் எடையும் உடையது. இவற்றின் ஆயுள்காலம் 15 வருடங்கள் ஆகும்

Kodkod:
தென் அமெரிக்காவில் காணப்படும் இவ்வகை பூனைகளே பூனையினத்தின் மிகசிறியவையாகும். இவை பெரும்பாலும் சிலி மற்றும் அர்ஜென்டினாவில் காணப்படும் அரியவகை விலங்கினமாகும் . நன்குவளர்ந்த இந்தபூனையின் எடை 2 கிலோகிராம், 40-50 cm உயரம் தான். (அழியும் தருவாயில் உள்ள விலங்கு)

கொசுறு:
Peebles cat தான் கின்னசில் இடம்பிடித்த பூனை இதன் எடை ஒரு கிலோகிராம் தான். இத்தனை 200 mL கிளாசுக்குள் அடக்கிவிடலாம்


Thumbelina:
இதுதான் உலகத்தின் மிக சிறிய குதிரை இதன் எடை 27 கிலோகிராம்தான். குள்ள குதிரையின் உயரம் 17 இன்ச் தான். (பார்த்தா பாவமா இல்ல.....

Paedocypris:
இந்தோனிசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளில் காணப்படும் இந்த மீன்கள் தான் உலகிலே மிகசிறியதாகும் அதுமட்டும்மல்ல முதுகுஎலும்பு (vertebrate) உள்ள உயிரினங்களிலே இதுதான் மிகசிறியதாம். இதன் நீளம் சும்மா 7.9 mm தான் (1cm கூட இல்லை -ஆச்சிரியமா! இருக்கா)

Brazilian Gold frog:
பிரேசில் நாட்டின் தென்பகுதியில் காணப்படும் இந்தவகை தவளைகள் தான் உலகிலே மிகசிறிய தவளை இனமாகும். Izecksonh's Toad என்றும் அழைக்கப்படுகிறது. இவை சுமார் 9.8 mm உடையது. (இதுகூட 1 cm விட சிறியதுதான்)



Thread snake:
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளில் இவ்வகை பாம்புகள் காணபடுகின்றன. இவைதான் உலகிலே மிகசிறிய பாம்பினமாகும். இதன் அதிகபட்ச நீளம் 4.25 இன்ச் தான்


Bee Hummingbird:
கியுபா நாட்டில் காணப்படும் இந்தவகை பறவைதான் உலகிலேயே மிகசிறிய பறவையாகும். இதன் நீளம் 2.25 இன்ச், எடை 2 கிராம் தான். இவை பறந்தபடியே பூவில் தேன் குடிக்கும் அப்போது இவற்றின் சிறகை நம் கண்ணால் காண முடியாது. இறக்கை அடிக்கும் வேகம் 90 தடவை/வினாடி, இதயத்துடிப்பு 1260 தடவை/நிமிடம். இவை கட்டிய கூட்டின் அளவு 0.75 இன்ச் அகலமும் 1.2 இன்ச் ஆழமும் இருக்கும்.
அப்படியென்றால் இவை இடும் முட்டையின் அளவு ஒரு கடுகு தான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!