2009ம் ஆண்டு விட்டுச்சென்ற தடங்கள்
பகுதி 01
>>>>>>>>>>>>>>>>>>> ஜனவரி மாதம் >>>>>>>>>>>>>>>>>>>
ஜனவரி 1:
அசாம் மாநிலத்தில் குவஹாத்தியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
காசா அகதி முகாம் ஒன்றில் இஸ்ரேல் வான்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் ஹமாஸ் இயக்கத்தின் நிசார் ரயான் என்ற முக்கிய இராணுவத் தலைவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர். சிலோவாக்கியா யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்ட 16வது ஐரோப்பிய நாடானது
ஜனவரி 2: உலகில் வயதில் கூடிய மனிதர் மரீயா டி ஜீசஸ் என்ற பெண்இ தனது 115வது அகவையில் போர்த்துக்கலில் காலமானார்.
சோமாலியாவில் இரண்டாண்டுகளாக நிலை கொண்டிருந்த எதியோப்பியப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டன.
ஜனவரி 3: கானாவில் இடம்பெற்ற அதிபர் தேர்தல்களில் ஜோன் அட்டா மில்ஸ் மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
ஜனவரி 8: இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 1.5 விழுக்காடாகக் குறைத்தது. இது 315 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவானதாகும்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாதோரினால் ஜனவரி 8 / 2009 இல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
ஜனவரி 9: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய இயக்கு தளமான வின்டோஸ் 7 இன் சோதனைப் பதிப்பை வெளியிட்டது.
ஜனவரி 10: பெருவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 33 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி 11: தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2009க்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
ஜனவரி 14: சோமாலி கடற்கொள்ளைக்காரர்கள் கிழக்கு ஆபிரிக்காவில் தாம் பிடித்து வைத்திருந்த இரண்டு கப்பல்களை விடுவித்தனர். (சிஎனென்)
ஜனவரி 15: அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று 155 பேருடன் நியூயோர்க் நகரில் அட்சன் ஆற்றில் வீழ்ந்தது. அனைவரும் உயிர் தப்பினர். அனைத்துலக வானியல் ஆண்டு ஆரம்ப நிகழ்வுகள் பாரிசில் உள்ள யுனெஸ்கோ கட்டிடத்தில் இடம்பெற்றன.
ஜனவரி 20: பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றார்
இயக்குநர் சீமான் உட்பட தமிழ்தேசியவாதிகள் மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்
ஜனவரி 29: இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் கு.முத்துக்குமார் சென்னையில தீக்குளித்து இறந்தார்.
>>>>>>>>>>>>>>>>>>> பெப்ரவரி மாதம் >>>>>>>>>>>>>>>>>>>
பெப்ரவரி 1: 1744 இல் மூழ்கிய விக்டரி என்ற பிரித்தானியப் போர்க்கப்பலின் பகுதிகள் ஆங்கிலக் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டன.
பெப்ரவரி 5: ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 503வது விக்கெட்டை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனையை முறியடித்தார்.
பெப்ரவரி 7: மடகஸ்காரில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது காவற்துறையினர் சுட்டதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
நாகப்பட்டினம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் (45 வயது) என்பவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
பெப்ரவரி 8: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பரவிய காட்டுத்தீ காரணமாக குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர். நானூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின. பெப்ரவரி 9: எகிப்தில் சக்காரா என்ற இடத்தில் 2600 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்தின் 30 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 10: ஓக்லகோமாவில் லோன் குரோவ் என்ற இடத்தில் நிகழ்ந்த சூறாவளியில் 8 பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
பெப்ரவரி 11: மோர்கன் சுவாங்கிராய் சிம்பாப்வேயின் புதிய தலைமை அமைச்சரானார்.
பெப்ரவரி 12: நியூயோர்க்கில் விமானம் ஒன்று குடிமனை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
பெப்ரவரி 14: பாகிஸ்தானில் தெற்கு வாசிரிஸ்தானில் அமெரிக்க வானூர்திகள் வீசிய ஏவுகணை வீச்சில் 25 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
பெப்ரவரி 19: வன்னியில் நிவாரணப் பொருளை பெறுவதற்காக மக்கள் முண்டியடித்த போது நெரிசலில் நசியுண்டு குழந்தை ஒன்று உயிரிழந்தது.
>>>>>>>>>>>>>>>>>>> மார்ச் மாதம் >>>>>>>>>>>>>>>>>>>
மார்ச் 1: சந்திரனுக்கான சீனாசின் முதலாவது விண்கலம் சாங்கேர் 1 வெற்றிகரமாக சந்திரனில் மோதியது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜானே து யா ஜானே நா என்ற படத்துக்காக பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது
.
மார்ச் 3: பாகிஸ்தானில் லாகூர் நகரில் இலங்கை துடுப்பாட்ட அணி வீரர்கள் சென்ற வாகனம் மீது இனம்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் காயமடைந்துஇ 5 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
மார்ச் 5: மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி உட்பட ஐந்து பொருட்கள் நியூயோர்க் நகரில் ஏலத்தில் விடப்பட்ட போது அவற்றை இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா 18 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார்
.
மார்ச் 7: வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களின் ஒளிச்செறிவை ஆராயவென நாசா கெப்ளர் விண்கலத்தை ஏவியது.
மார்ச் 9: குருத்தணு (குளோனிங்) முறையில் மனிதரை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கு
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி மறுத்துள்ளார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 12: விண் எச்சங்களில் இருந்து தப்புவதற்காக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் சிறிது நேரம் ரஷ்ய அவசர விண்கூடத்திற்குள் சென்றனர்
மார்ச் 19: தொங்கா நாட்டில் 7.9-அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது.
மார்ச் 20: ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மோதிக்கொண்டன
பகுதி 02 அலசல் தொடரும்......
No comments:
Post a Comment