Wednesday, December 30, 2009

2009ம் ஆண்டு விட்டுச்சென்ற தடங்கள் பகுதி 02

2009ம் ஆண்டு விட்டுச்சென்ற தடங்கள்
பகுதி 02

>>>>>>>>>>>> ஏப்ரல் மாதம் >>>>>>>>>>
ஏப்ரல் 1: பிரித்தானிய ஹெலிகாப்டர் ஒன்று ஸ்கொட்லாந்து வட பகுதியில் உள்ள கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். அல்பேனியா மற்றும் குரொவேசியா நேட்டோ அமைப்பில் இணைந்தன. சென் பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் விளாடிமிர் லெனினின் சிலை ஒன்று சேதமடைந்தது.
ஏப்ரல் 2: பிச்சை எடுத்தலை வங்காள தேசம் தடை செய்தது. ஜி20 உச்சிமாநாடு இலண்டனில் ஆரம்பமாகியது.

London Summit 2009 - Stability | Growth | Jobs
ஏப்ரல் 3:
நஜிப் துன் ரசாக் மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பதவியேற்றார்.
Malaysia's former PM Abdullah Badawi waves from a vehicle in Kuala Lumpur on Friday.

எல்லைப்பிரச்சினையில் உள்ள பிரியா விகார் கோயில் அருகே தாய்லாந்து கம்போடியா படையினர் தமக்கிடையே துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர்
ஏப்ரல் 12: சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கப்பல் தலைவர் ரிச்சார்ட் பிலிப்ஸ் வ்டுவிக்கப்பட்டார்.
ஏப்ரல் 13: ஜோர்ஜியாவின் அதிபர் மிக்கைல் சாக்கஷ்விலிக்கு எதிரான போராட்டங்கள் திபிலீசி நகரில் தொடர்ந்தது.
ஏப்ரல் 14: உலகின் முதலாவது படியெடுப்பு முறையிலான ஒட்டகம் பிறந்திருப்பதாக துபாயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Injaz camel: Dubai claims world's first cloned camel
ஏப்ரல் 16: ஐநா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாக விஜய் நம்பியார் இலங்கை வந்தார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டார்0
ஏப்ரல் 17: ஆப்கானிசுத்தானில் நங்காகார் மாகாணத்தில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 20: 2009-ம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. சீனப் பெருஞ்சுவரின் 3850 கிமீ பகுதியைக் கண்டுபிடித்திருப்பதாக சீனா அறிவித்தது.
ஏப்ரல் 21: சூரிய மண்டலத்துக்கு வெளியே கிளீசு 581e என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது
People climbing Great Wall of China
ஏப்ரல் 22: உலகப் பெருங்கடலின் 1,700,000 சதுர கிமீ பரப்பளவுக்கு ஆர்ஜெண்டீனா உரிமை கோரியது.

ஏப்ரல் 24: இலங்கை சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு கருணா நியமிக்கப்பட்டுள்ளார்


>>>>>>>>>>>> மே மாதம் >>>>>>>>>>
மே 1: பன்றிக் காய்ச்சல் நோய்க் கிருமிகள் 16 நாடுகளில் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பன்றிக் ...
மே 2: பசிபிக் தீவுகளின் ஒன்றியத்தில் இருந்து பிஜியின் உறுப்புரிமை காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டது.
மே 3: அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தாக்குதல்.
மே 20: இந்தோனீசியாவின் ஜாவாவில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 98 பேர் கொல்லப்பட்டனர்.
மே 22: இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாகப் பதாவியேற்றார்.manmohan singh
மே 23:
நேப்பாளத்தின் பிரதமராக மாதவ் குமார் நேப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழல்களில் தொடர்பு கொண்டிருந்த தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ-இயூன் தற்கொலை செய்து கொண்டார்.
மே 24: நாசாவின் அட்லாண்டிஸ் விண்ணோடம் பூமி திரும்பியது.
அட்லாண்டிஸ் விண்ணோடம்

மே 29: மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பதவியேற்றார். சோயுஸ் விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
ISS crew (Nasa)
மே 31: தெற்கு ஒசேத்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன

>>>>>>>>>>>> ஜூன்மாதம் >>>>>>>>>>
ஜூன் 1: ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று 228 பயணிகளுடன் பிரேசிலுக்கு அருகில் காணாமல் போனது
ஜூன் 2: காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐநாவின் சிறப்புக்குழுவினர் காசாவை வந்தடைந்தனர்

ஜூன் 3: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மீரா குமார் மக்களவையின் முதலாவது பெண் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர்
ஜூன் 4:
1989 யனன்மென் சதுக்கப் படுகொலைகளின் 20 ஆண்டு நிறைவை நினைவுகூர ஹொங்கொங் நகரில் 150,000 பேர் கூடினர்.
அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா எகிப்தின் கெய்ரோ நகரில் முஸ்லிம் உலகிற்கான தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்.
ஜூன் 6: தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் சிக்கி 76 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்
ஜூன் 7: பிரேசிலில் காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த மேலும் 4 பேரின் உடல்கள் அத்திலாந்திக் கடலில் கண்டெடுக்கப்பட்டன
A Brazilian Navy ship, bottom left, approaches debris that Brazilian authorities believe are from Air France Flight 447 in the Atlantic Ocean, Saturday, June 6, 2008 (Photo: Brazilian Air Force)

ஜூன் 8: சீனாவிலிருந்து சட்டவிரோதமாக வடகொரியாவுக்குள் நுழைந்த இரு அமெரிக்க ஊடகவியலாளர்காளுக்கு 12 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

ஜூன் 11: பன்றிக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் H1N1 தீநுண்மத்தை உலகப் பரவல் தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14: ஐரோப்பாவின் முதலாவது H1N1 இறப்பு ஸ்கொட்லாந்தில் பதிவானது
ஜூன் 21: மரவள்ளி மாயா மக்களின் முக்கிய உணவாக இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளது.
2009 ஐசிசி உலக இருபது20 கிண்ணத்தை இலங்கைக்கு எதிராக ஆடி பாகிஸ்தான் வெற்றி கண்டது.
Shahid Afridi's knock proved crucial in Pakistan's win, Pakistan v Sri Lanka, ICC World Twenty20 final, Lord's, June 21, 2009
கிரீன்லாந்து டென்மார்க்கிடம் இருந்து பிரிந்து செல்லுவதற்கான முதற்படியாக தன்னாட்சியை அறிவித்தது.
ஜூன் 24: 35,000 ஆண்டுகள் பழமையான புல்லாங்குழல் ஒன்று ஜெர்மனியில் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
Bone flute from Hohle Fels (H Jensen)
ஜூன் 30: மும்பையில் பந்த்ரா-ஒர்லி ஆகிய பகுதிளை இணைக்கும் வகையில் 5.6கிமீ நீள கடல்வழிப் பாலம் திறக்கப்பட்டது

Front page news and headlines today
பகுதி 03 அலசல் தொடரும்.....
ஓட்டு குத்துங்கோ ! !

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!