2009ம் ஆண்டு விட்டுச் சென்ற தடங்கள்
பகுதி 03
>>>>>> டிசம்பர் மாதம் >>>>>>>>>>
டிசம்பர் 1: ஒந்துராசின் ஜனாதிபதியாக பொர்ஃபீரியோ லோபோ சோசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
17 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக வட கொரியா தனது நாணய மதிப்பை உயர்த்தியது.
டிசம்பர் 15: போயிங் டிரிம் லைனர் 787 -ன் முதல் சோதனை ஓட்டம்
டிசம்பர் 24: அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒபாமாவின் திட்டத்துக்கு செனட் அங்கீகாரம்
டிசம்பர் 26: இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள் நாடுகள் 2004 இல் 250,000 பேரை காஅவு கொண்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் 5ம் ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தார்கள்
டிசம்பர் 30: ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 சிஐஏ முகவர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 5 கனடியப் படையினரும் ஒரு ஊடகவியலாளரும் கொல்லப்பட்டனர். ஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானிய நபர் விடுவிக்கப்பட்டார். மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் நகரில் காட்டுத்தீ காரணமாக 37 வீடுகள் உட்பட 33இ000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாயின. இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்
>>>>>> அக்டோபர் மாதம் >>>>>>>>>>
நவம்பர் 1: இலங்கையின் முன்னாள் படைத் தளபதி மீது போர்க்குற்ற விசாரணை
நவம்பர் 3: முன்னாள் பொசுனிய-செர்பியத் தலைவர் ரதொவான் கராட்சிச் போர்க் குற்ற விசாரணைகளில் முதற் தடவையாகக் கலந்து கொண்டார்.
நவம்பர் 5: சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை
நவம்பர் 12: இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹவாயில் கண்டுபிடிக்கப்பட்டன
நவம்பர் 13: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் தாக்குதல் 7 பேர் படுகாயம் நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது
நவம்பர் 14:ஜெய்ப்பூரில் தொடருந்து தடம் புரண்டதில் 7 பேர் உயிரிழப்பு
நவம்பர் 28:
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஓய்வுபெற்றுள்ள இராணுவ படைகளின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக விளங்குவர் என்று தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் அவரது ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
>>>>>> அக்டோபர் மாதம் >>>>>>>>>>
அக்டோபர் 1: ருமேனியாவின் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
சுமாத்திராவில் இரண்டாவது நிலநடுக்கம் (6.8 அளவு) இடம்பெற்றது. முதல் நாள் நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 500 ஐத் தாண்டியது.
சீனாவில் 60 ஆண்டு நிறைவு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரியலூரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் உச்சநீதிமன்றம் நடைமுறைக்கு வருகிறது தாண்டியது
சுமாத்திரா நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியது
அக்டோபர் 5: நிறப்புரிகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தமைக்காக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு 2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (ஏபி) பாங்கொக் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து கவிழ்ந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி) 2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
கணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் காலமானார்.
அக்டோபர் 7:சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அக்டோபர் 9: 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.
பிலிப்பைன்சில் வெள்ளம் காரணமாக 181 பேர் கொல்லப்பட்டனர்.
நாசா தனது ஆளில்லா விண்கலங்கள் இரண்டை நிலவில் மோதவிட்டது
எயிட்டியில் ஐநா வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அக்டோபர் 12: 2009 பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது
அக்டோபர் 21: மார்ஷல் தீவுகளின் அதிபர் லிட்டோக்வா டோமிங் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தார்
அக்டோபர் 22: மைக்ரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ் 7 இயக்குதளத்தை வெளியிட்டது
அக்டோபர் 30: உலக வெப்பநிலை மாற்றம் குறித்த ஐநா மாநாட்டில் ஒரே குரலாக ஒலிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சம்மதித்துள்ளனர்.
அக்டோபர் 31: ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவில் முறையே 5.6, 6.3 நிலநடுக்கம் பதிவாகியது.
>>>>>> செப்டம்பர்மாதம் >>>>>>>>>>
செப்டம்பர் 1:
போலந்தில் இடம்பெற்ற இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தின் 70 ஆண்டு நினைவுகூரல் நிகழ்ச்சியில் ஐரோப்பியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். லிபியாவில் 40 ஆண்டு புரட்சி நாள் கொண்டாடப்பட்டது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து பிஜி இடைநிறுத்தப்பட்டது.
செப்டம்பர் 11: மல்தோவாவின் அதிபர் விளாடிமிர் வரோனின் பதவியில் இருந்து விலகினார்.
உலகின் அதிக வயதுடையவரான கெட்ருட் பைன்ஸ் என்பவர் 115வது வயதில் லாஸ் ஏஞ்சலீசில்
இறந்தார்
செப்டம்பர் 13: கொங்கோவில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு போராட்டம் முடிவு பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
கசக்ஸ்தான் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் இறப்பு
>>>>>>>>>>>> ஆகஸ்ட்மாதம் >>>>>>>>>>
ஆகஸ்ட் 1 பிலிப்பைன்ஸ் நாட்டு முதல் பெண் அதிபர் அக்கினோ இறப்பு
ஆகஸ்ட் 5: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை வட கொரியா விடுவித்தது
ஆகஸ்ட் 10: கிழக்கு இமயமலையில் 244 தாவரங்கள் 16 நிலநீர் வாழிகள் உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 16: நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்துவரும் உலக தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் யமேக்காவின் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 24 இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு
ஆஷஸ் கிரிக்கெட் கோப்பையை இங்கிலாந்து மீண்டும் வென்றது
ஆகஸ்ட் 25: மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால் மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார்.
>>>>>>>>>>>> ஜூலை மாதம் >>>>>>>>>>
ஜூலை 1: இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நிருபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்
ஜூலை 2: ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதென தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எச்1என்1 தீநுண்மத்திற்கு எதிரான தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டையில்_14-ம்_நூற்றாண்டைச்_சேர்ந்த_சிவலிங்கம்_கண்டெடுப்பு
ஜூலை 3: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் டைனசோர்களின் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜூலை 4: 2009 விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரியான வீனசை வென்றார்.
வட கொரியா ஏழு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் சோதித்தது.
ஜூலை 5:
ரொஜர் ஃ பெடரர் 2009 விம்பிள்டன் டென்னிஸ் பந்தயப் போட்டி இறுதி ஆட்டத்தில் அண்டி ரொடிக்கை வென்று பீட் சாம்பிரசின் கிராண்ட் சிலாம் சாதனையை முறியடித்தார்.
ஜூலை 6: கிறித்தவ விவிலியத்தின் ஆரம்பகால நூலின் 800 பக்கங்கள் இணையத்தில் பார்வைக்கு வக்க்கப்பட்டன.
ஜூலை 8: 35வது ஜி8 உச்சி மாநாடு இத்தாலியில் ஆரம்பமானது.
]
ஜூலை 14: ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 28வது தலைவராக போலந்தின் முன்னாள் பிரதமர் யேசி பூசெக் தெரிவு செய்யப்பட்டார்.
ஜூலை 18: உலகின் வயதில் கூடிய மனிதர் ஹென்றி அலிங்கம் 113 வது வயதில் இறந்தார். முதலாம் உலகப் போரின் பங்கெடுத்த பிரித்தானிய ரோயல் வான்படையின் போர்வீரர்களில் உயிரோடுக்கும் இருவரில் ஒருவர் இவர்.
ஜூலை 19: இலங்கை துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
ஜூலை 24: உறைந்த விந்துவில் இருந்து பெரும் சீனா பாண்டா ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஜூலை 26:இந்தியா முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்தது
ஜூலை 28 வெள்ளை மாளிகையில் ஒபாமா அளித்த விருந்தில் சமோசா
ஜூலை 29 :மைக்ரோசாப்ட் யாகூ! ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு
No comments:
Post a Comment