Saturday, January 9, 2010

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2010.01.26

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது ஜனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் Titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை ஜனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் ஜனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட அத்காரம் கொண்ட ஜனாதிபதி முறை உருவாகப்பட்டது. ஜனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இலங்கையின் ஜனாதிபதி முறைமை பிரான்சின் ஜனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் ஜனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை ஜனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும். ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விலக்க முடியும்
பட்டியல் வருமாறு:
வில்லியம் கொபல்லாவ இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாவார்
(செப்டம்பர் 17 1897-ஜனவரி 30 1981)
வில்லியம் கொபல்லாவ
இவர் 1958 - 1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கை தூதுவராகவும்இ 1961 - 1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962 - 1972 வரையில் இலங்கையின் ஆளுனர் நாயகமாக பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போதுஇ இவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு ஜனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றபட்டு ஜே.ஆர். ஜனாதிபதியான போது இவர் ஓய்வு பெற்றார். இவரது மகன் மொண்டி கொப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.

இலங்கையின் 2வது ஜனாதிபதி
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா >>> ஜே. ஆர். ஜயவர்தனா இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியாவார்

(செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996) இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் ஜனாதிபதி பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின பல்மத பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடான அதிகாரப் பரலாக்கத்தை முன்வைக்கின்றது. இவ் ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது.
இலங்கையின் 3வது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா
ரணசிங்க பிரேமதாசா
ரணசிங்க பிரேமதாசா (ஜூன் 23 1924 - மே 1 1993) இலங்கையின் முன்னாள் அதிபராவர்
இவர் அதிபாரவதற்கு (ஜனாதிபதியாவதற்கு) முன்னர் ஜே.ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசியிலிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் இரகசியமான முறையில் கடத்தப்பட்ட பலர் பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்டக்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலபகுதிகளில் மணிக்கூட்டுகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது இதற்கு இவர் ஆருடத்தில் நம்பிக்கையுள்ள இவரின் சோதிடம் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்தாகக் கூறப்படுகின்றது. இவர் 1993 இல் மே தின ஊர்வலத்தின் போது கொழும்பு ஆமர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார். இவரது ஞாபகமாக ஞாபகார்தமாக இவர் கொலைசெய்யபட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 4வது ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்கா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15 1922 - செப்டம்பர் 21 2008) இலங்கையின் 4வது
ஜனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமாவார்.
ஜனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்

இலங்கையின் 5வது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29 1945) இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.
இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார்.அதன் பின்னர் சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரிக்கா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பா பட்டபடிப்பை முடித்தவராவார். இவர் சிங்களம்ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார்.

இலங்கை திரும்பிய சந்திரிக்கா இ.சு.க.வில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார்.1974 இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1976 - 1977 காலப்பகுதியில் கொத்தனி பன்னைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.1976- 1979 காலப்பகுதியில் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட அலோசகராக பணியாற்றினார்

1999 ஒக்டோபர் மாதத்தில்ஜனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னாதாகவே சந்திரிகா தேர்ர்தலை நடத்த திட்டமிட்டார். டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைப் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார் அங்கரிக்கப்படாத சுயசரித நூலான 'கள்வரின் தலைவி' என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது 'குண்டர் படை'யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார். அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிப் பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றார்

இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
பேர்சி மகேந்திர ராசபக்ச அல்லது சுருக்கமாக மகிந்த ராசபக்ச ((Mahinda Rajapaksa, மஹிந்த ராஜபக்ச பிறப்பு: நவம்பர் 18 1945) இலங்கையின் ஆறாவது குடியரசுத் தலைவர். வழக்கறிஞரான இவர் 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். 2004 ஏப்ரல் 6 முதல் பிரதம மந்தரியாகவும் இருந்தவர். இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியாக நவம்பர் 19 2005 அன்று பதவியேற்றார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராவார்.
இவரின் மனைவியாவார் சிராந்தி ராசபக்ச இவருக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
கௌரவ விருதுகள் :
பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர். மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2010ற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்யிடும் வேட்பாளார்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பென்சேகா (முப்படைகளின் பிரதானி)
Sarath Fonseka Information at Lankanewspapers.com
ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பிறப்பு 18 டிசம்பர் 1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கின்றார்.
முப்படைகளின் பிரதானி என்ற சிறப்பு பெயரையும் பெற்றவர். நவம்பர் 16 2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இவர் இதன் பின்பு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இணைந்து கொண்டார். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.

நன்றி : இணையம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!