Wednesday, October 14, 2009

உலகத் தர நிர்ணயம் ISO

"அக்டோபர் 14"
உலகத் தர நிர்ணய நாள்

World Standards Day 2009


உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.)அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.) அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம்ஸ (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும்


ஒவ்வோர் ஆண்டும் ஐ.எஸ்.ஓ. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான நிபுணர்கள் பங்கேற்கின்றனர். பல தொழில்நுட்பக் குழுக்களும், துணைக் குழுக்களும் பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டுப் பல்வேறு தொழில்களுக்கான தர நிர்ணயங்களை அந்நிபுணர்கள் வகுத்தளிக்கின்றனர் அல்லது மேம்படுத்துகின்றனர். IEC, ISO மற்றும் ITU என்பன சந்தைகளை உருவாக்கல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக்களைவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன


உலககின் மிகப்பெரிய நியம நிறுவனமாக சர்வதேச நியம ஸ்தாபனம் (ISO) விளங்குகின்றது. இந்த ஸ்தாபனம் (ISO) அன்றாடம் மனிதன் பயன்படுத்துகின்ற அல்லது சேவை பெறுகின்ற அமைப்புகளில் நியம வடிவங்களை உருவாக்குவதாகவுள்ளது.


சர்வதேச நியம ஸ்தாபன தலைமை பணிமனை சுவிஸர்லாந்து (Swiss) நாட்டில் அமைந்துள்ளது. இந்த பொது நிறுவனம் 161 நாடுகளின் உறுப்பினர்களை கொண்டுள்ளது. அங்கத்தவர் தவிர இதில் 50,000 நிபுணர்கள் நியம வடிவங்களுக்கு உயிகொடுப்பதில் உழைக்கின்றனர்.

வருடாந்தம் 1,100 க்கு மேற்பட்ட நியம கடைப்பிடிப்பு விதிகளை வெளியிடும் இந்த ஸ்தாபனம் இதுவரை 17,500 சர்வதேச நியமங்களை உருவாக்கியுள்ளது.

இன்றய நவீன உலகின் அன்றாட வாழ்வியலில் இந்நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. நாம் தினமும் உபயோகிக்கும் அல்லது காணுகின்ற எந்த பொருட்களிலும் இதன் நியம வரையறை ஏதோ ஒருவிதத்தில் பங்கெடுத்திருப்பதை காணலாம். இந்தவகையில் சர்வதேச அளவில் மக்களின் வாழ்வியலுடன் ஒன்றிவிட்ட இதன் சேவை நவீன உலகின் மிகமுக்கிய தேவையாகிவிட்டதுஉலககின் மிகப்பெரிய நியம நிறுவனமாக சர்வதேச நியம ஸ்தாபனம் (ISO) விளங்குகின்றது. இந்த ஸ்தாபனம் (ISO) அன்றாடம் மனிதன் பயன்படுத்துகின்ற அல்லது சேவை பெறுகின்ற அமைப்புகளில் நியம வடிவங்களை உருவாக்குவதாகவுள்ளது.


சர்வதேச நியம ஸ்தாபன தலைமை பணிமனை சுவிஸர்லாந்து (Swiss) நாட்டில் அமைந்துள்ளது. இந்த பொது நிறுவனம் 161 நாடுகளின் உறுப்பினர்களை கொண்டுள்ளது. அங்கத்தவர் தவிர இதில் 50,000 நிபுணர்கள் நியம வடிவங்களுக்கு உயிகொடுப்பதில் உழைக்கின்றனர்.

வருடாந்தம் 1,100 க்கு மேற்பட்ட நியம கடைப்பிடிப்பு விதிகளை வெளியிடும் இந்த ஸ்தாபனம் இதுவரை 17,500 சர்வதேச நியமங்களை உருவாக்கியுள்ளது.



இன்றய நவீன உலகின் அன்றாட வாழ்வியலில் இந்நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. நாம் தினமும் உபயோகிக்கும் அல்லது காணுகின்ற எந்த பொருட்களிலும் இதன் நியம வரையறை ஏதோ ஒருவிதத்தில் பங்கெடுத்திருப்பதை காணலாம். இந்தவகையில் சர்வதேச அளவில் மக்களின் வாழ்வியலுடன் ஒன்றிவிட்ட இதன் சேவை நவீன உலகின் மிகமுக்கிய தேவையாகிவிட்டது.

ISO மேலதிக இணைப்புக்கள்





நன்றி இணையம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!