Monday, October 12, 2009

ஆகாயத் தீவு

( உல்லாச செயற்கை தீவுகளின் ஒருபகுதி)
palm_island_2-450x300.jpg (450×300)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள டுபாய் (Dubai) நாட்டில் அமைந்துள்ள மூன்று செயற்கை தீவுகளில் அமைக்கப்பட்டு வரும் Palm Islands (பேரீச்சம் மரம் வடிவான தீவு) என்ற மாபெரும் வேலைத்திட்டம் உலகின் 8வது அதிசயமாக சொல்லப்படுகின்றதுpalm-island-dubai.jpg (539×352)

இந்த பிரமாண்ட தீவுகளில் மிகநவீன சினிமாக்கள், உணவகங்கள், உல்லாசவிடுதிகள், மாடகைகள், வீட்டுத்தொகுதிகள், வர்த்தக நிறுவனங்கள், ஹொட்டேல்கள் என மிகப்பெரிய கட்டுமானங்களை உள்ளடக்குகின்றது. இவை அனைத்தும் ஜுமேஐரா (Jumeirah) பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இன்றய டுபாய் நாடு இப்படிப்பட்ட அதி நவீனமான பல கட்டிடங்களால் புகழ்பெற்று விளங்குகின்றது. அத்தகையவற்றில் மிகப் பிரமாண்டமானதும் மிவும் பொருட்செலவில் தயாராகி வருகின்றதுமாகிய பெருமை இந்த ஆடம்பர உல்லாச தீவுகளையே சேரும். இந்த பிரமிப்பூட்டும் மாபெரும் கட்டுமானத்தில் குறிப்பிடும் படியான சிறிய தகவல்களையும் தரவுகளையும் கீழ் காணலாம்

 • டுபாயில் அமைந்துள்ள 3 உல்லாச செயற்கை தீவுகளின் பெயர்கள் பின்வருமாறு.
 • இந்த மூன்று செயற்கை தீவுகளின் மொத்த பரப்பளவு உத்தேசமாக 80 மில்லியன் சதுர மீற்றர் ( 80 சதுர கிலோமீற்றர்) ஆகவும இவை அதிகபட்சம் கடலினுள் 7.5 கிலோமீற்றர் நீண்டும் உள்ளன.
 • 2001 ம் ஜூன் மாதம் தொடங்கிய இந்த வேலைத்திட்டத்தில் 44,000மேலான வேலையாட்கள் இரவுபகலாக ஈடுபட்டுள்ளனர்.
 • மாபெரும் கட்டுமானத்தின் மொத்த செலவினம் 12.3 பில்லியன் டொலர்.
 • இந்த பிரமாண்டமான தீவுகள் கட்டுவதற்கு முன்பு பலவருடம் திட்டமிடல் நடந்துள்ளது. செயற்கை தீவு அமைய இருந்த இடங்களை மட்டும் 4 வருடம் மேலாக பல சோதனை ஆராச்சிக்கு உட்படுத்தினர்.
 • இந்த செயற்கை தீவுகளில் தனிமனிதர் , நிறுவனங்கள் , பிரபலங்கள் என பலவகையிலும் உள்ள மக்கள் உரிமையாளர்களாக இருக்கின்றனர்.
 • ஆடம்பர தீவுகள் அனைத்திற்கும் உல்லாச பயணிகள் , சுற்றுலா பயணிகள் சென்று வரமுடியும் . பயணிகள் அல்லது வசிப்போர் தீவுகளுக்கு பயணிப்பதற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டபடகுகளை அல்லது நடைபாதையை உபயோகிப்பர்.
 • இந்த பேரீச்சம் மரம் வடிவான அமைப்பில் 70 க்கு மேற்பட்ட வில் போன்ற (பேரீச்சம் ஓலை அல்லது கிளை) அமைப்பில் வீட்டுத் தொகுதியும் அதன் மரம் போன்ற அமைப்பில் பிரதான வீதி,கடைத் தொகுதியும் அமைந்துள்ளது.
 • நவீன உலகின் மாபெரும் கட்டிடத்தொகுதியும் , மிகச்செலவானதும் , அழகானதும் , ஆடம்பரமானதும் என பல்வேறு பட்ட பரிமானங்களில் பெயர் பெற்றுள்ளது.
 • இந்த பிரமாண்ட செயற்கை தீவுகளில் மிகசிறியது ஜுமேஐரா (Palm Jumeirah)ஆகவும் , டெய்ரா (Palm Deira) மிகபெரியதுமாகவுள்ளது. டெய்ரா , ஜெபல் அலிஐ (Palm Jebel Ali) விட 5 மடங்கும் ஜுமேஐராவை விட 8 மடங்கும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஜெபல் அலி (Palm Jebel Ali) தீவின் கட்டுமானத்தில் விஷேச தன்மை ஒன்றும் உள்ளது. அதாவது டுபாய் ஆட்சி தலைவரால் சொல்லப்பட்டவாசகம் தீவை சுற்றிவர இராட்சத அரபு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. (வாசக அர்த்தம் ஆங்கிலத்தில்-'Take wisdom from the wise people; Not everyone who rides is a jockey'.-தட்டிக்கொடுப்போர் சொல்கேள்;தட்டிவீழ்த்துவோர் சொல் கேளாதே!)
 • மொத்த பாஃம் தீவுகளும் 10,000 மேற்பட்ட தொடர்மாடிகளையும் 10,000மேற்பட்ட ஆடம்பர வீடுகளையும் 1000 மேற்பட்ட நீர்வீடுகளையும் 100க்கு மேலான அதிநவீன (4,5 நட்சத்திர) ஹொட்டல் களையும் மற்றும்பலநூறு பாரிய கட்டிடங்களையும் உள்ளடக்கியுள்ளது.
 • அதிகபட்சமாக கடல் சீற்றத்தால் உகுவாகும் 4 மீற்றர் அலையை தாங்கும் வண்ணம் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • இவை இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகளில் மிகவும் பெரியவை எனும் சாதனை பெற்றுள்ளன.
 • தீவுகளை உருவாக்குவதற்கு பலநூறு மில்லியன் தொன் மணலும் பாறைகளும் பாவிக்கப்பட்டுள்ளது. பாவிக்கப்பட்ட மணல்களில் பெரும் பகுதி சமுத்திர அடியில் இருந்து பெறப்பட்டதாகும்.
 • டெய்ரா தவிர்ந்த மற்றய இரண்டிலும் மக்கள் குடியிருக்க தொடங்கிவிட்டனர். டெய்ராவின் வேலைத்திட்டம் 2020ம் வருடத்தில் பூர்த்தியாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 • இந்ததீவுகள் அமைக்கப்பட்டதன் மூலமாக டுபாய் நாட்டின் கரையோரத்தின் அளவு 520 கிலோமீற்றர் நீளத்தினாலும் டுபையின் சுற்றளவு 120 கிலோமீற்றர் அதிகரித்துள்ளது.
 • டெய்ரா தவிர்ந்த மற்றய இரு தீவுகளை உருவாக்குவதில் 100 மில்லியன் கனமீற்றர் மேலான பாறைகல், மண் என்பவற்றை உபயோகித்துள்ள கட்டுமானத்தினர் டெய்ராவுக்கு 1000 மில்லியன் கனமீற்றர் தேவைப்படும் எனவும் கூறுகின்றனர். அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட டெய்ரா பாரிஸ் நகரை விடவும் பெரிதாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
 • தீவுகளை உருவாக்குவதற்கு வேண்டிய கற்பாறைகள் ஐக்கிய இராச்சியத்தின் 16 வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்டன. இந்த பாறைகள் தலா 7 மில்லியன் கனமீற்றர் அளவு விகிதத்தில் ஒவ்வொரு தீவுகளிலும் பாவிக்கப்பட்டது .
 • உல்லாசதீவுகள் ஒவ்வொன்றிலும் பல ஆயிரம் பேரீச்சமரங்கள்நாட்டப்பட்டுள்ளன. அத்துடன் பலவித கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பெருமளவில் வளர்க்கப்படுகின்றது.
 • மத்திய கிழக்கின் முதலாவது Marine Park அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மிக நவீன பொழுதுபோக்கு திடல்கள் , உடற்பயிற்சி நிலையம் , கடைகள் , மருந்தகங்கள் , மருத்துவமனைகள் , சினிமாக்கள் என ஒரு நகரத்தில் இருக்கும் சகல தேவைக்குமான தொகுதிகள் பலபகுதியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • பாஃம் தீவுகள் அனைத்தும் டுபாயில் பெருகிவரும் உல்லாச பயணத்துறை வருவாயை மேலும் அதிகரிப்பத்ற்காகவும் பெருகிவரும் சனத்தொகையினால் உண்டான இடநெருக்கடியை சமாளிக்கவும் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 • 2001 ம் ஜூனில் "ஜுமேஐரா" வேலைத்திட்டத்தினை தொடர்ந்து "ஜெபல் அலி" , "டெய்ரா" தீவுகளின் திட்டவேலைகள் முறையே 2002 ,2004 ஒக்டோபர் மாதங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், முதலிரு தீவுகளும் 2008 ம் வருடமும் 3 வது 2015 இல் முடிப்பதாக திட்டமிட்டபோதிலும் இதுவரை ஜுமேஐரா தீவின் கட்டுமானமே பூர்த்தியாகியுள்ளது.
 • கட்டுமானத்தை Nakheel Properties எனும் நிறுவனம் கவனித்து வருகின்றது. இந்நிறுவனம் சந்தித்துள்ள பணநெருக்கடி மிகப்பெரிய டெய்ரா வேலைத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக பிந்திய செய்தி குறிப்பிடுகின்றது.
 • மூன்று உல்லாச தீவுகளை உருவாக்குவதற்கு பயன்படுத்திய பொருட்களை (பாறை,மண் ,கல் உட்பட) கொண்டு 2 மீற்றர் உயரமும் அரை மீற்றர் தடிப்புமுள்ள சுவர் உருவாக்கப்படும் பட்சத்தில் அது உலகை (பூமி) மூன்று முறை வலம் வரும் அளவு கொண்டதாம்.
 • பூமியை வலம் வரும் விண்வெளி கலங்களில் பயணிக்கும் வீரர்கள் கண்களுக்கு அல்லது சந்திரனில் இருந்து புலப்படும் அளவிற்கு இதன் பிரமாண்டம் உள்ளதாம்.
  (பூமியில் இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்களுள் இந்த உல்லாச தீவும் விண்ணில் இருந்து பார்க்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.)
 • பாஃம் ஜுமேஐரா 2008 நவம்பர் 20 ம் திகதி உலகின் மிகப் பெரிய 2000 பிரபல்யங்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. அன்றயதினம் அங்கு நடாத்தி முடிக்கப்பட்ட மிகப்பெரிய வாணவேடிக்கை உலகசாதனையாக பதியப்பட்டுள்ளது. இந்த திறப்புவிழா நிகள்சிகளுக்கு மட்டும் 20 மில்லியன் டொலர் மேலாக செலவிட்டுள்ளனர். மேலும், இந்த வாணவேடிக்கையை நிகழ்த்திமுடிப்பதற்காக சீன நாட்டிலிருந்து பலவல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மேலுள்ள விடயம் தொடர்புள்ள காட்சிகள்(கட்டுமானம்)
ஜுமேஐரா தீவில் நடைபெற்ற வான வேடிக்கை வீடியோ வடிவில்.
large picture

map


நன்றி இணையம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!