Thursday, October 22, 2009

ஐக்கிய_நாடுகள்

"அக்டோபர் 24"
64ம் ஆண்டில் கால் பதிக்கும் ஐக்கிய_நாடுகள்

ஐக்கிய நாடுகள் கொடி
ஐக்கிய நாடுகள் அல்லது ஐநா அல்லது யூஎன் என்பது நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24- 1945ல் கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும் 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை ஜனவரி 10 1946 இல் இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய இதையொத்த தேசங்களின் அணி League of Nations என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. தற்போதய நிலைவரப்படி 192 உறுப்புநாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் பார்க்கவும்

அவதானி நாடு
மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக ஒரு உறுப்பினரல்லாத அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ளது. சில அனைத்துலக நிறுவனங்களும் இவ்வாறான அவதானிகள் நிலையில் உள்ளன

படிமம்:Nyc-un-building.jpg
தலைமையகம் - மேன்ஹட்டன் தீவு, நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா
உறுப்பினர் 192 நாடுகள்
செயலாளர் நாயகம் - பான் கி மூன்

64ம் ஆண்டுக்கான செயலாளர் நாயகம் பான் கி மூன் உரையின் போது
'பொதுவான பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு'
உலக விவகாரங்களில் இது பிரத்தியோகமான தருணமாகும்

பாதுகாப்பு குழு - சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, அமெரிக்கா
அமைப்பு போர்க்கால கூட்டனியாக

போர்க்கால கூட்டனியாக 1 ஜனவரி 1942 அனைத்துலக நிறுவனமாக: 24 அக்டோபர் 1945

ஐக்கிய நாடுகள் முறைமை 5 முக்கிய அமைப்புகளைக் கொண்டது:
1.ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும்இ நிதந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.
General Assembly of the United Nations.jpg
இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

2. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
3. ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
4. ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
5. ஐக்கிய நாடுகள் செயலகம்


அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான ஹேக் அனைத்துலகச் சட்ட அக்கடமி என்னும் நிறுவனத்துடன் அமைதி மாளிகை (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
International Court of Justice.jpg
ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந் நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த நிரந்தர அனைத்துலக நீதிமன்றம் (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும்இ அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல.

இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள்,ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்தவழக்குகளையே இது கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், சிறப்பாக வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின்தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.

மேலும் படிக்க


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!