Sunday, October 11, 2009

பிரமாண்டமான ஆய்வு

Large Hadron Collider
பெரிய ஆட்ரான் மோதுவி
உலகின் மிகப்பெரியதும் மிகவும் செலவுகூடியதுமான விஞ்ஞான பரிசோதனை LHC (Large Hadron Collider) எனும் பெயருடன் அழைக்கப்படுகின்றது. எப்போதும் விஞ்ஞானிகள் மூளையை குடையும் பிரபஞ்ச உருவாக்கத்திற்கான ஆராச்சி நோக்கத்திற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு திட்டம் ஒரு சர்வதேச ஆய்வாகவும் இதில் 111 நாடுகளைச்சேர்ந்த 2,000 மேலான முன்னணி விஞ்ஞானிகள் பங்கெடுக்கின்றனர். இதுவரை மனிதனால் இத்தகைய பிரமாண்டமான ஆய்வுகூடம் எப்போதும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு இதற்காக 4 பில்லியன் டொலர் பணத்தினையும் இதுவரை செலவிட்டுள்ளனர். இந்த LHC ஆய்வுகூடம் சுவிஸர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரின் (சுவஸ் - பிரஞ் எல்லையில்) நிலத்தின் அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. 14 வருடம் மேலான கட்டுமானத்தின் பின்பு முதலாவது பரிசோதனை.

LHC ஆய்வுகூடம் நிலமட்டத்திலிருந்து சராசரி 100 மீற்றர் ஆழத்தில் நிலத்தடி சுரங்கத்தில் 27 கிலோமீற்றர் (17 மைல்கள்) சுற்றுவட்டத்தில் ஒரு வளைய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராட்சத திட்டத்திற்குரிய பணத்தின் முதலீட்டாளர்களாக 20 ஐரோப்பிய நாடுகள் பங்குவகிக்கும் இதேவேளையில் பிரித்தானிய நாடு முக்கிய பங்கினையும் வகிக்கின்றது. இந்த ஆராச்சி வேலைகள் அடுத்த 15 வருடங்களுக்கு தொடருமென நம்பப்படுகின்றது.

கடவுள் துணிக்கை (God Particle) கண்டறியும் இந்த இராட்சத பரிசோதனை உலக அழிவிற்கு இட்டுச்செல்லுமென பலர் கருதுவதற்கான காரணமாகவுள்ள ஆய்வின் மிக முக்கிய தரவுகள் வருமாறு.


  • பிரபஞ்சம் தோன்ற காரணமாக இருந்த இராட்சத வெடிப்பு (Big Bang) பற்றிய நிறுவுதலை (கோட்பாட்டினை) உறுதிப்படுதுவதற்காக 4,000 மில்லியன் டொலர் மேலான பணம் செலவிடப்படுகின்றது. அதாவது கடவுளின் துணிக்கையை கண்டறிவதற்கு இவ்வளவு விலை கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
  • புரத்திரன் (இலத்திரனின் எதிர் துகள் ) எனும் அடிப்படை துகள்கள் எதிர்திசையில் மோதுவதனால் உண்டாகும் விளைவுபற்றி ஆராய்தல் முக்கிய ஆய்வாகும். 14,000 மில்லியன் வருடங்கள் முன்பு நடந்த ஒரு தொடக்க நிகழ்வினை ஆய்வுகூடத்தில் நடாத்திகாட்டுதல் இந்த ஆய்வின் முக்கிய விடயம். அதிலும் Big Bang பின்னதான ஒரு செக்கனின் ஒரு பில்லியன் பிரிவு கால அளவில் நடந்திருக்கக்கூடிய நிகழ்வினை நிரூபித்தல்.
  • LHC இன் நில அடியிலான முதன்மை மையம் 7 மாடி கட்டிடத்தின் பிரமாண்டத்தினை ஒத்த விசாலமுடையது குறிப்பிடத்தக்கது.(இதன் பிரமாண்டம் கீழ் தரப்பட்டுள்ள முக்கிய இணைய தளங்களில் அசையும் வரைபடங்களுடன் காணலாம்.)
  • 26,659 மீற்றர் சுற்றளவுடய LHC ஆய்வகம் 9,300 பாரிய காந்தங்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இராட்சத வளைய அமைப்பு அதீத உறை நிலை வெப்பமான -271.3 பாகை செல்சியசில் பாதுகாக்கப்படுகின்றது. மேற்படி உறை நிலைகளுக்காக 10.080 தொன் நைதரசன் திரவமும் 60 தொன் கீலியம் திரவமும் பாவிக்கப்படுகின்றது.
  • முவுமையாக LHC வேலை செய்யும் தறுவாயில் 1,000 பில்லியன் புரத்திரன் துகள்கள் செக்கனுக்கு 11,245 தடைவை வலம்வரும்போது 600 மில்லியன் மோதல்கள் ஒவ்வொரு செக்கனிலும் நடைபெறுமென கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற் சொல்லப்பட்ட துகள்கள் ஒளியின் வேகத்தினை ஒத்த வேகத்தில் பயணித்து மோதும் எனவும் சொல்லப்படுகின்றது.
  • LHC ஆய்வு வளையம் அசாதாரண குளிர்நிலையில் மட்டுமல்ல அசாதாரண அமுக்கத்திலும் பாதுகாக்கப்படுகின்றது. LHC காற்று இல்லாத வெற்றிடமாக , அதாவது சந்திரனில் உள்ள அமுக்கத்தினை விடவும் 10 மடங்கு குறைவாக பேணப்படுகின்றது. LHC ஆய்வுகூடத்தில் ஒளியின் வேகத்தில் செக்கனுக்கு 600 மில்லியன் புரத்திரன் மோதல்களை உருவாக்குவது முதல் கட்ட பரிசோதனையாகவும் இதனை 1,000 மில்லியன் மோதல்களாக 2010 ம் வருடம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • LHC வளையத்தில் புரத்திரன் துணிக்கையின் வெற்றிகர மோதலின்போது மிகப்பெரிய வெப்பசக்தி உருவாகுமெனவும் இது சூரியனில் உள்ள வெப்பத்தினை விடவும் 100,000 மடங்கு பெரியதெனவும் சொல்லப்படுகின்றது.
  • செக்கனுக்கு 600 மில்லியன் தடவை நடைபெறும் மோதல்களும் பல ஆயிரம் கணனிகள் உதவியுடன் பதிவாக்கி உலகின் பலபகுதியிலும் உள்ள விஞ்ஞானிகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. LHC ஆய்வகத்தில் ஒரு வருடத்தில் பதிவாகும் தகவல் இருபக்கம் பதிவு செய்து பாவிக்கக்கூடிய 100,000 DVD களில் பதியப்படுகின்றது. மேற்படி சோதனைகள் 15 வருடம் நடபெறும் திட்டத்தின்படி சேமிக்கப்படும் தகவல் 1.7 மில்லியன் DVD களை உள்ளடக்கும் என கணக்கிட்டுள்ளனர். மேற்படி பரிசோதனை தகவல் சேர்கப்படும் வேகமானது 50,000 மில்லியன் தொலைபேசிகள் ஒன்றாக இயங்கும் வேகமுடன் ஒப்பிடப்படுகின்றது!.
  • மேலே சொல்லிய தகவல்கள் அடங்கிய விடையங்க்கள் 33 நாடுகளின் ஆய்வுமையங்களினால் (கனடா, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கொலண்ட் , அமெரிக்கா உள்ளடங்கலாக) சிதைவடையாது பாதுகாக்கப்படும். சேகரிக்கப்படும் தகவல்கள் பல ஆய்வுமையங்களில் பல வருடங்களுக்கு நுணுக்கமாக ஆராயப்பட்டு இறுதி முடிவுகள் வெளியிடப்படும் (இத்தனை முயற்சிகள், திட்டமிடல் , செலவுகளின் முடிவில் கடவுளின் துணிக்கை விடைதருமா என்பது கடவுளுக்குதான் புரியும்!.)

தொடர்புடைய முக்கிய ஆங்கில இணைய தளங்கள் விபரம் கீழ் காணலாம்

lhc.web.cern.ch

wikipedia


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!