Thursday, September 3, 2009

தமிழர் விளையாட்டுகள்

தமிழர் விளையாட்டுக்களின் தொடர்ச்சி

தமிழர் ஒலிம்பிக்

தற்காலத்தில் எல்லாப் பொழுதுபோக்கு ஆட்டங்களையும் (டப்ஹஹ்ள்) விளையாட்டுக்களாக (எஹம்ங்ள்) எடுத்துக்கொள்வது இல்லை. ஒரு செயலை விளையாட்டாகக் கருத வேண்டுமானால் ஐந்து விதிகளுக்குள் அது அமைய வேண்டும். அந்த ஐந்து விதிகள்:
1) அமைப்பு கொண்ட விளையாட்டாக இருக்கவேண்டும்.
2) போட்டியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
3) இரண்டு அல்லது அதற்கு மேற்பட் டோர் குழுக்களாக இருந்து பங்கேற்க வேண்டும்.
4) வெற்றியை ஏற்றுக்கொள்ளத் தக்க விதிகளை உள்ளடக்கி இருக்கவேண்டும்.
5) பாதுகாப்புக் கவசம் கொண்டதாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட ஐந்து விதிகள் இருந்தால்தான் நவீன உலகில் ஒரு விளையாட்டு, உலக மயமாகக் கூடியதாக இருக்கும். இந்த வகையில் பார்க்கிற போது தமிழரின் தனித்துவமான விளையாட்டுகள் உலகமயமாக்கப் படுகிறபோது பல சிக்கல்களைச் சந்திக்கும். இது அனுபவபூர்வமான உண்மை.

மேலும் பழந்தமிழர் விளையாட்டுகள் பரவலாக்கபடாமல் குறிப்பிட்ட மக்கள் சார்ந்த பகுதியில் இருப்பதால் அவை எல்லைகளைக் கடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்நிய படையெடுப்புகளினால் இவ்விளையாட்டுகள் வலுவிழந்து கரையத் தொடங்கின. சில உருமாறிப் பெயர் மாறத் தொடங்கியது. உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.

1) மல், மற்போர்:
கருவிகளின் துணையில்லாமல் தமது உடல் வலிமையால் இருவர் தமக்குள் சண்டையிடும் ஒருவகை வீர விளையாட்டு. இதற்கு நடுவர் நியமிக்கப்பட்டிருந்தார். மற்போரின் தொடக் கத்தை மற்பறை ஒலித்து அறிவிக்க, அரசர், வீரர், பெண்டிர் அனைவரும் காண மகிழ்ந்து குழுமிய செய்தியைப் 'பெருங்கதை' என்ற (52;3155-3117) இலக்கியத்திலே காணலாம். சிலப்பதிகாரத்தில் இருவர் மோதிய மல்யுத்தத்தை 'அளையும் யானை போற் பாய்ந்து மல்லொற்றியும்' என்று வர்ணித் துள்ளார் இளங்கோ அடிகள். அதாவது இரு யானைகள் மோதி பொருந்துவது போல் மல்யுத்தம் நிகழ்ந்துள்ளது.

நம்முடைய இந்த மல்யுத்தம் ஜப்பானில் அப்படியே விளையாட்டாக நிலவி வருகிறது. அது இங்கிருந்து போனதுதான். இன்று மல்யுத்தம் ஏனைய நாடுகளில் மேல்நாட்டினர் வகுத்த விதிமுறைகளுடன் மல்யுத்தமாக (ரதஉநபகஐசஎ) நடத்தப்படுகின்றது. அதே நேரத்தில் இவ்விளையாட்டு மாற்றம் பெற்றுப் பல தற்காப்புக் கலை விளையாட்டுகளாக உருப்பெற்றுள்ளது.

2) வில் விளையாட்டு:
வில் விளையாட்டு என்பது அம்பினைச் செறித்துக் குறிபார்த்து எய்தல். வில்வித்தையினைக் கற்றுத்தரக் கை தேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விற்போர், வாட்போர் ஆகிய வற்றைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சையில் உள்ள கல்வெட்டில் இராஜ இராஜ சோழனின் காலத்தில் நடந்த விற்போர் பற்றிய செய்தி இருக்கிறது. ஆங்கிலத்தில் 'அதஇஏஉதவ' (வில்வித்தை) என்று அழைக்கப்படும். இவ்விளையாட்டு, நவீனப் படுத்தப்பட்டு 'ஒலிம்பிக்' வரை வந்துவிட்டது.

3) கலைக்கூத்து:
கலைக்கூத்து எனப்படும் கயிற்று நடனம். 60களிலே திரைப்படங்களிலே இருந்த இக்கலை, வலுவிழந்து போய் இருக்க, மேலை நாடுகளில் அது பல பரிணாமங்கள் பெற்று உடல்வித்தையாக (எவஙஅசஅபஐஇந) மாறி நிற்கிறது.

4) கிலி கிலியாடல்:
கிலி கிலியாடல் என்பது சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஒலியெழுப்பி மகிழ்கிற விளையாட்டு. சங்க காலத்தில் இருந்து இந்த வழக்கம் வேறுபாடின்றி இன்றளவும் தொடர்ந்து வருகின்றது.

5) கோழிப்போர்:

கோழிப்போர்-தமிழர்கள் விலங்கு கள், பறவைகள் போன்ற வற்றுக்கும் வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவற்றை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண் டிருந்தனர். சங்க இலக்கியமான குறுந் தொகையில் 'குப்பைக் கோழித் தனிப் போர் போல' என்று குறிப்பிடுவதிýருந்து கோழிப்போர் சங்க காலத்திலேயே வழக்கிýருந்தமையை அறிய முடிகிறது.
இன்றும் சிறிய நகரங்களில், பெரிய கிராமங்களில் சிறுசிறு கத்திகள் கட்டிப் பறவைகளை மோதவிடு கிறார்கள். மேலைநாடுகளில் மிருக, பறவை பாதுகாப்பு இயக்கம் என்றதன் பேரில் இப்போட்டிகளைத் தடை செய்துவிட்டனர். விதி விலக்காக கிரீஸ், இத்தாலி நாடுகளில் மட்டும் நடக்கிறது.

6) சடுகுடு:
இது, தமிழர்களின் விளையாட்டு. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இது இருக்கிறது. தமிழகத்தில் 'தினத்தந்தி' நாளிதழை நிறுவிய சி.பா.ஆதித்தனார் இவ்விளையாட்டு வளர, பல முயற்சி களை மேற்கொண்டார். 60களில் சடுகுடு வாக இருந்த இவ்விளையாட்டை, இப்போது 'கபடி'யாகத் தமிழ்த் திரைப் படம் அடையாளப்படுத்துகிறது. இது, திராவிட விளையாட்டு. இப்போது, இந்திய விளையாட்டாக மாறிப் போய்விட்டது.

7) தாயம்:
தாயம், இது தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. உள்ளரங்க விளையாட்டு (ஐய்க்ர்ர்ழ் எஹம்ங்) எனச் சொல்லலாம். பழங்கால நாகரிகத்தில் தாய விளையாட்டில் சுடுவண் காய்களைப் பயன்படுத்தி விளையாடியதாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள்.

8) பல்லாங்குழி:
இது பெண்களால் ஆடப்படும் விளையாட்டு. தரையில் அல்லது மரப் பலகையில் உள்ள பதினான்கு அல்லது இருபத்துநான்கு குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவர். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணித முறை சார்ந்த விளையாட்டாகும். சிக்கலான இவ்விளையாட்டு, சதுரங்க விளையாட்டுக்குச் சமமாகக் கருதப்படுகின்றது.

9) கிட்டிப்புள்:
இது ஆடவர்களால் ஆடப்படும் வெளி அரங்க (ஞன்ற்ஈர்ர்ழ் எஹம்ங்) விளையாட்டு. இந்த விளையாட்டில் பெரிய குச்சியும் சிறிய குச்சியும் பயன்படுகின்றன. கிராமங்களில் பரவலாக இருந்த விளையாட்டு. இதுதான் தற்கால கிரிக்கெட் விளையாட்டிற்கு மூல வடிவமாகக் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டை நவீனப்படுத்தினால் உலகப் புகழ்பெற வாய்ப்புண்டு.

10) சிலம்பம்:
சிலம்பத்தை ஒரு கலையாக முதற்சங்க காலம் முதற்கொண்டே மூவேந்தர்கள் ஆதரித்து வந்துள்ளார்கள். திருவிளையாடற்புராணத்தில் சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. வைத்திய நூலான 'பதார்த்த குணசிந்தாமணி'யில் சிலம்பப் பயிற்சி, குதிரைப் பயிற்சி மூலம் ஒருவரின் உடல் வலுவடையுமென்றும் பல நோய்களைத் தீர்க்கும் என்றும் சொல்லப் படுகிறது. சிலம்பாட்டத்தின் முக்கியத்துவம் அதன் அடி (கால்) வரிசையில் இருக்கிறது. ஒவ்வொரு அடிக்கும் தனித்தனிப் பெயருண்டு. இவ்வடிவரிசை பரதத்தோடு பொருந்தி வருகிறது.

சிலம்பாட்டம் என்பது கம்பை மட்டும் வைத்து விளையாடுவதல்ல. சுருள்வால், ஈட்டி, கட்டாரி, சங்கிý, மான்கொம்பு வைத்தும் இவ்விளையாட்டை விளையாடலாம். முன்பு போர்ச்சிலம்பம் இருந்தது. அதைப் போருக்கு மட்டும் பயன் படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது அலங்காரச் சிலம்பம். திருவிழாக் காலங்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் கம்பைப் பல விதமாகச் சுழற்றுவது. தீச்சிலம்பம், இரவில் சிலம்புக் கம்புடன் தீப்பந்தம் வைத்து சுழற்றுவது.

வேலூரில் உள்ள ஒரு கோட்டையில் சிலம்பக் கூடம் இருக்கிறது. குறுநில மன்னர்களின் ஆட்சியிலும் சிலம்பம் பரவியிருந்தது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு வளர்ச்சி குன்றியது.

இன்றைக்குச் சிலம்பம் உலக விளையாட்டாகப் பரிணமிக்கிற காலம் வந்து கொண் டிருக்கிறது. அதற்குக் காரணம், மலேசியாவில் இயங்கும் சிலம்பக் கழகம், சிலம்பத்தைக் கலை என்ற வட்டத்தில் இருந்து மீட்டு, விளையாட்டாக மாற்றியதே ஆகும். அவ்வடிப் படையில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் சிலம்பம் அறிமுகமாகியிருக்கிறது. இதே போல் தமிழரின் ஏனைய கலைகளையும் மறு சீரமைத்து விளையாட்டாக மாற்றினால் இன்றைக்கு 40 நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் கலந்துகொள்கிற தமிழர் ஒலிம்பிக் விளையாட்டு நடத்தலாமே!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!