Wednesday, December 1, 2010

இன்னுமோர் சோஷியல் நெட்வேர்க் - Jumo

சோஷியல் நெட்வேர்க் என்றாலே ஃபேஸ்புக் தான் என்று சொல்லுமளவுக்கு ஃபேஸ்புக் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஃபேஸ்புக்கினை உருவாக்கியவர்களில் ஒருவரான Chris Hughes இன்று மற்றுமொரு சமூக வலைப்பின்னல் இணைய தளம் ஒன்றை தொடங்கிவைத்துள்ளார். Jumo என்ற பெயருடன் அறிமாகியிருக்கும் இந்த சோஷியல் நெட்வேர்கானது ஃபேஸ்புக்கினை போலில்லாமல் ஒரு சமூக சேவை சார்ந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது। இது ஒரு இலாப நோக்கம்மற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜூமோ மூலம் சமூக நோக்கம் சார்ந்த நல்ல விடயங்களுக்கான ஆதரவினை வழங்க முடியும்.இந்த புதிய இணைய தளத்தில் Projects , Issues என்று இரண்டு எண்ணக்கருக்கள் உள்ளன. உதாரணமாக ”அனைவருக்கும் கல்வி” ”வறுமையை ஒழிப்போம்” “Freelancer union” “Freedom of speech” என்று காணப்படுகிறது. இந்த Projects , Issues என்பவற்றை பின்தொடர்ந்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யமுடியும்.
இந்த
Jumo இணைய தளமானது Beta பதிப்பாகவே வெளிவந்துள்ளது. தற்போதைக்கு ஃபேஸ்புக் கணக்கினை வைத்திருப்பவர்களே இந்த தளத்தினை உப்யோகிக்க முடியும். எதிர்காலத்தில் அனைவராலும் இந்த சோஷியல் நெட்வேர்க்கினை பயன்படுத்த முடியும் என Jumo குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது ஃபேஸ்புக் இணைய தளத்திற்கு மாற்றீடான தளமாக இல்லாமல் ஃபேஸ்புக் இணைய தளத்தில் இல்லாத ஒரு விடயத்தை தேடி jumo பயணிக்கவுள்ளது. அதாவது ஃபேஸ்புக் பாவனையாளர்களிடம் காணப்படும் விளையாட்டுத்தனத்தை(fun ) நீக்கி சில ஆக்கபூர்வமான விடயங்களை நோக்கி மக்களை அழைத்துச் செல்ல இருக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!