உதாரணமாக Orkut, Google Buzz, Google wave. இவற்றின் மூலம் கற்ற பாடங்களுடன் மிகவும் திட்டமிடப்படு Google மேற்கொள்ளவிருக்கும் அடுத்த தாக்குதல் தான் GoogleMe (Google அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய சமூக வலைப்பின்னல் தளம்). இதுவும் facebook இன் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இது இவ்வாறிருக்க facebook நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதுடன் தேவையற்ற வசதிகள் அகற்றப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்பொழுது அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இணையத்தளங்களுக்கான Like Button இணையப்பாவனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அம்சமாகும். அத்துடன் பயனாளார் கணக்குகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தனித்துவத்தை பேணும் நடவடிக்கைகளும் நோ்த்தியாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.
facebook பாவனை பற்றிய முக்கிய புள்ளிவிபரங்கள்.
- 500 000 000 (500 million) க்கு மேற்பட்ட பாவனையாளா்கள் facebook ஐ பயன்படுத்துகின்றனர்.
- ஒவ்வொரு பாவனையாளரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.
- பாவனையாளா்கள் ஒவ்வொரு மாதமும் 700 000 000 000 (700 billion) க்கும் அதிக நிமிடங்களை facebook இல் செலவிடுகின்றனர்.
- 900 000 000 (900 million) க்கும் அதிக குழுக்கள், பக்கங்கள் (pages, groups, events and community pages) முதலியவற்றில் இணைந்து செயற்படுகின்றனார்.
- ஒரு பாவனையாளர் சராசரியாக 80 குழுக்கள், பக்கங்கள் (pages, groups, events and community pages) முதலியவற்றில் இணைந்துள்ளார்.
- ஒவ்வொரு பாவனையாளரும் சராசரியாக 90 விடயங்களை (web links, news stories, blog posts, notes, photo albums, etc.) ஒவ்வொரு மாதமும் பகிர்கின்றனர்.
- ஒவ்வொரு மாதமும் 30 000 000 000 (30 billion) க்கும் அதிக விடயங்கள் பகிரப்படுகின்றது.
- தமிழ் உட்பட 70ற்கு மேற்பட்ட மொழிகளில் facebook ஐ பயன்படுத்த முடியும்.
- 60 000 இற்கும் அதிக Server கள் facebook இன் தடையற்ற இயங்கத்திற்காக பயன்படுத்தப் படுகின்றது
அருமையானப் பகிர்வு ... வாழ்த்துக்கள்
ReplyDelete