Thursday, April 1, 2010

உலகத்திலேயே பெரிய தாவரம்

உலகத்திலேயே பெரிய தாவரம்?
காளான்

கிட்டத்தட்ட 64,000 வகைகளுக்குமேல காளான்கள் இருக்கு.
சிறு வயதில் நம்மில் சிலர் குப்பைமேட்டிலும், புதர்களிலும் மழைவிட்டதும் சட்டென்று தோன்றும் நாய்க்கொடைகளை பார்த்திருக்கிறோம்

ஸ்போர் அப்படின்னு சொல்லப் படுற விதை போல இருக்கிறஒண்ணிலிருந்துதான் வளர ஆரம்பிக்கும். இந்த ஸ்போர்கள் ரொம்ப ரொம்ப எடை குறைவாயும் ரொம்பச் சின்னதாயும் இருக்கும். ஸ்போரிலிருந்து நூல் மாதிரியான அமைப்புக் கிளம்பி வளரும்.

இதுக்கு ஹைஃபே அப்படின்னு பேரு. இந்த ஹைஃபே இழை மாதிரிஇருக்கும்.
சில வகைகள் வெறும் கண்ணால் பார்த்தாத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில்தான்
தெரியும்!


இனப்பெருக்கக் காலத்தில் தரைக்குக் கீழே இருக்கிற இந்த நூல் மாதிரியானஹைஃபேயிலிருந்து தரைக்கு மேலே குடை மாதிரியோ இல்லை வெவ்வேறுவடிவங்களிலே
ஒரு அமைப்புக் கிளம்பும். இதைச் சாதரணமாக் கண்ணாலே பார்க்கலாம். இதை ஃபுரூட் பாடி (Fruit body) அப்படின்னுசொல்லுவாங்க! இதிலிருந்து லட்சக் கணக்கிலே ஸ்போர்கள் உற்பத்தியாவும்.
சாதகமான சூழ்நிலையில் இந்த ஸ்போர்களிலிருந்து மறுபடியும் ஹைஃபேவளரும். சூழ்நிலை சாதகமாய் இல்லாட்டி வருஷக் கணக்கிலே கூடக் காத்திருந்துஅப்புறமா ஸ்போரிலிருந்து ஹைஃபே வளரும். இனத்துக்குத் தகுந்தபடி இந்த நூல்மாதிரியான சில ஹைஃபேயில் செல் சுவர்கள் இருக்கும். சிலதிலே செல் சுவர்களேஇல்லாமலும்
இருக்கும்.

காட்டிலே இருக்கிற அநேக மரங்களின் வேர்களில் இந்த மாதிரியான ஹைஃபே சேர்ந்துவளரும்!
தங்களுக்குத் தேவையான சர்க்கரையையும் அமினோ அமிலங்களையும்காளான்கள்,
காட்டு மர வேர்களிலிருந்து உறுஞ்சிக் கொள்ளும். அதுக்குப் பதிலா
தண்ணியையும் தாது உப்புக்களையும் உறுஞ்சி மரங்களுக்குக் காளான்கள் தரும்!

மழை தூற ஆரம்பிச்சவுடனே ஒரு வாசனை வருமே .. .. மண் வாசனைன்னுகூட
சொல்லுவாங்களே! அது என்ன தெரியுமா? மண்ணிலே இருக்கிற காளான்ஹைஃபேக்கள்
மழையால் தூண்டப் பட்டுச் சில கெமில்களை உற்பத்தி பண்ணும். அதோட
வாசனையைத்தான் நாம மண் வாசனை அப்படிங்கிறோம்! சில காளான்கள்ரொம்ப துர்
நாற்றம் கொண்டதாயிருக்கும். இன்னும் சிலது அருமையான வாசனையோடஇருக்கும்!

நல்ல சாதகமான சூழ்நிலைகளில் இந்த ஹைஃபே ரொம்ப வேகமா வளரும். ஒருகாளன் ஹைஃபே
நூலை நீளமா ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணா வச்சா ஒரு நாளிலே வளர்ந்தநீளம்
ஒரு மைல் அளவு கூட இருக்குமாம்!

அர்மில்லேரியா பல்போசா அப்படிங்கிற வகைக் காளான் அமெரிக்கா பக்கத்திலே இருக்கிற வட மிசிகன் பிரதேசத்திலே காட்டில் 106 ஏக்கருக்கும் மேலே 6000 டன் எடையிலே பரவி
இருக்காம்!

ஆயிரக் கணக்கான வருடங்களா இது வாழ்ந்துகிட்டிருக்கலாம்னு கண்டு பிடிச்ச்சிருக்காங்க! ஒரே தனித் தாவரம், இவ்வளவு பெரிசா இருக்குறது ரொம்ப அபூர்வம்தானே!”


இல்லைம்மா! யீஸ்ட் (Yeast) அப்படிங்கிற வகைக் காளான் ஒரே ஒரு செல்லால் மட்டுமே ஆனதாவரம்கிறதும் ரொம்ப ஆச்சரியமான விஷயம்! ஒரே செல் தாவரம்னாலும் இதாலேநன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு!

பேக்கரிப்
பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும்
யீஸ்ட் ரொம்பப் பயன்படுது. அதே சமயம் தொண்டையிலும் வாயிலேயும்
கொப்புளங்கள் உருவாக்கித் தொல்லை கொடுக்கிறதும் இந்த யீஸ்ட்காளான்தான்!

சில
பேருக்குத் தொடைகளில் அரிப்பு ஏற்படுத்தும் காளான்களும் இருக்கு.
சுகாதாரமில்லாத உள்ளாடைகளை அணியறது மாதிரியான காரணங்களில்அங்கே காளான்
வளர்ந்து படர் தாமரை நோயை உருவாக்கும். பாதிக்கப் பட்ட மனித உடலோடஒரு
பகுதியப் பாருங்க.

நிலம்,தண்ணி, காத்து இப்படிக் காளான் ஸ்போர்கள் இல்லாத இடமே கிடையாது!
தாவரங்கள், பிராணிகள், மனுஷர்கள் இப்படி எல்லா ஜீவராசிகள் உடம்பிலேயும்
காளான் வளரும்!

முக்கியமான விஷயம் - காளான்களில் பச்சயம் கிடையாது .. .. ..”

பச்சையம் இல்லாட்டி தன்னோட உணவை அது எப்படி தயாரிக்க முடியும்

நியாயமானகேள்வி! காளான்களாலே தங்களோட உணவைத் தாங்களே தயாரிக்கமுடியாததாலே
உணவுக்காக மத்த தாவரங்களையோ அல்லது மற்ற உயிரினங்களையோசார்ந்துதான்
இருக்கும். உயிருள்ள தாவரங்களையோ அல்லது மற்ற ஜீவராசிங்களையோஉணவுத்
தேவைக்காகச் சார்ந்திருந்தா ஒட்டுண்ணி அப்படின்னும் செத்துப்போனவைகளைச்
சார்ந்திருந்தா சாறுண்ணி அப்படின்னும் சொல்லுவாங்க.

இன்னொருவிஷயம்.. .. காளன்கள் வாழ சூரிய வெளிச்சம்கூடத் தேவை இல்லை! அதனாலே
இருட்டான பகுதிகளிலும், மண்ணுக்கடியிலேயும் கூட ஜம்முனு வளரும்.

காளான்கள் எப்படி எடுத்துக்கும்?”

எந்த ஒரு ஆகாரத்தையும் உணவாக்கிறதுக்கு முன்னாலே காளான்கள் சிலஎன்சைம்களைச்
சுரக்கும். அந்த என்சைம்கள் உணவோட கடினமான திசுக்களையும் எளிமைப்
படுத்திக் கொடுக்கும்.

சாதாரணமா மற்ற உயிரினங்கள் உணவை சாப்பிட்ட பிறகுதான் ஜீரணிக்க ஆரம்பிக்கும். ஆனால் சுரக்கிற என்சைம்கள் மூலமா
காளன்கள் முதல்லே வெளியிலேயே உணவை ஜீரணிச்சிட்டு அதுக்குப்பிறகுதான்
உள்ளே உறிஞ்சவே ஆரம்பிக்கும்.! அதை ஜீரணிக்கும் போது காளன்களிலிருந்து
உற்பத்தியாவுற கெமிக்கல்களுக்கு மைக்கோடாக்சின் (micotoxin) அப்படின்னுபேரு!

இந்த மைக்கோடாக்சின்கள், பேக்டீரியா மாதிரியான மத்த கிருமிங்க கிட்டே இருந்து
காளான்களைக் காப்பாத்தும். அதே சமயம் ஏராளமான வியாதிகளுக்கும் இந்த
மைக்கோடாக்சின்கள் காரணமாயிடுது. சில மைக்கோடாக்சின்கள் சிலவியாதிகளைக்
குணமாக்கிற மருந்துகளாகவும் பயனாகுதுன்றதுதான் ஆச்சரியம்!

பேக்டீரியாக்களைப் போலவே காளான்களும் காத்து மண்டலத்திலே இருக்கிற நைட்ரஜன் வாயுவைத் தாவரங்களுக்குப் பயன் படுற தாது உப்புக்களா மாத்தும்! பல ஆர்கானிக்
அமிலங்களை வணிக ரீதியாத் தயாரிக்கக் காளன்கள் பயனாகுது.

நிறையக் காளான் வகைகள் மருந்துகள் செய்யப் பயன் படுது! உதாரணமாப்பென்சிலின் அப்படிங்கிற முக்கியமான மருந்து பெனிசிலியம் அப்படிங்கிறகாளான் வகையிலிருந்துதான் கிடைக்குது. இது ஒரு உயிர் காக்கும் மருந்து.

ஒருவிஷயம் தெரியுமா? உலகப் போர்கள் நடந்தப்போ ஏராளமான போர் வீரருங்கசெத்துப்
போனாங்க இல்லையா? துப்பாக்கிக் குண்டு பட்டோ பீரங்கிக் குண்டு பட்டோ
செத்தவங்களை விடக் காயங்களுக்குச் சரியான மருந்து இல்லாமல் பேக்டீரியா
தாக்குதலாலே அழுகிப் போய் இறந்தவங்கதான் அதிகம்.

முதல் உலகப் போரிலே காயம் ஆறினது 25%தான். ஆனால் ரெண்டாவது உலகப்போரிலே -
அதாவது பென்சிலின் கண்டு பிடிச்ச பிறகு - காயம் ஆறியது 95 சதவீதம்
பேருக்கு! இதுக்குக் காரணம் பேக்டீரியாக்களைக் கொல்லும் பெனிசிலினைப்பயன்
படுத்தியதுதான்!

இந்தப் பெனிசிலின் மருந்தைக் கண்டு பிடிச்சதுக்காகவும் அதோட மருத்துவக்குணங்களுக்காகவும் ஆல்ஃப்ரட் ஃப்ளமிங், எர்னஸ்ட் போரிஸ் செயின், சர்ஹோவர்ட் வால்டெர் ஃப்ளோரி இந்த மூணு பேருக்கும் 1945ம் வருஷத்தியநோபல் பிரைஸ் கிடைச்சிருக்கு!

1 comment:

  1. பெரிய தாவரம் பற்றி பெரிய (நீளமான)
    தகவல் நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!