Wednesday, March 31, 2010

இயற்கை கொலைகள்

இயற்கை கொலைகள்

பசுமை என்பது பிற்காலத்தில் ஒரு நாள் அகராதியில் தேடிப் பார்க்கக் கூடிய சொல்லாக மாறக்கூடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த கிராமங்களில் கூட பசுமையைக் காண முடியவில்லை. சுமை என்பது சுற்றுலாத் தளங்களில் மட்டுமே இயற்கையாகவும், பல இடங்களில் செயற்கையாகவும் காண முடிகிறது.

தனி மனிதனின் நியாமான ஆசையான வீடு வாங்குதல், அதை பெற்றதும் நின்று விடுவதில்லை. அடுத்து இதை விட பெரிய இடமாக வாங்க வேண்டும். அதில் அடுக்ககம் அமைத்து பணம் சேர்க்க வேண்டும் என நீண்டு கொண்டே போகிறது. பலர் எதற்காக பணம் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாக அதை சேர்ப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறோம்.

இத்தகைய ஆசைகளுக்காக நாம் பலி கொடுப்பது பல மரங்கள் மற்றும் நிலங்கள். ஒரு காலத்தில் நல்ல விளை நிலங்களாக இருந்த இடங்கள் பல இன்று அடுக்ககங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இதை வளர்ச்சி எனப் பெருமையடித்துக் கொண்டாலும் யோசித்துப் பார்த்தால் இது ஒரு மாபெரும் வீழ்ச்சி என்பது புரியும்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி அளவுக்கு மீறி சென்று கொண்டிருக்கிறது. அது நஞ்சில் சென்று முடியும் நாள் வெகுத் தொலைவில் இல்லை. இவற்றைக் கட்டுபடுத்த பலருக்கு நிச்சயம் மனம் வரப் போவதில்லை. நாம் அனைவரும் இந்த விடயத்தில் சுய நலவாதிகளாகவே இருக்கிறோம். எல்லோரும் ஆசைப் படும் போது நான் ஆசைப் படுவதில் என்ன தவறு? என வினா எழுப்புகிறோமே தவிற, இது நமக்குத் தேவையா என யோசிப்பவர்கள் மிகச்சிலரே.

ஒரு மரம் வெட்டும் முன்ஒரு மரக் கன்றாவது ஊன்றப் பட வேண்டும்!
பதினெட்டம் நூற்றாண்டில் ரெனி டீ ரீமர் என்பவர்தான் மரத்துகள்களில் இருந்து காகிதங்கள் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். அதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது குழவிப் பூச்சி தான். அவற்றின் செய்ல்பாடுகளில் இருந்துதான் மரத்துகளை உபயோகிக்கும் முறையைக் கண்டறிந்தார்.

ஆக்கத்திற்காக அவர் கண்டு பிடித்ததை இன்று அளவுக்கு அதிகமாகவும், தேவையில்லாமலும் வீணாக்கி இயற்கை வளமான மரங்களின் அழிவிற்கு துணை நிற்கிறோம். மரங்கள் அழியப் பெற்றால் நிலச்சரிவுகள் கட்டுபடுத்த முடியாமல் உயிரிழப்புகள் தொடர்வது நிச்சயம். அதோடில்லாமல் காற்றைக் கூட காசு கொடுத்து வாங்கி சுவாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் உறுதி.

இதைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நாம் இங்கு கைகோர்த்து செயல்பட வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். இவற்றின் அழிவைத் தடுக்கும் ஆரம்பமாக குறைந்தது தேவையில்லாமல் காகிதங்களை வீணாக்க மாட்டேன் என்ற உறுதியாவது எடுத்துக் கொள்ளப் பட வேண்டும்.

நமக்கு பயன்படாக் காகிதங்கள் குப்பையாக மாற்றப் படாமல்

Recycle சொல்லக் கூடிய மறு தயாரிப்பு முறைக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும்.



நாம் தேவையில்லாமல் வீணாக்கும் காகிதங்களில்
மரங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்!

மரம் வளர்ப்போம்! உயிர்க் காப்போம்!


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!