புவி வெப்பமடைவது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த நாட்டின் அரசாங்கமும் இதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை எனக் குறை கூறுவதில் துளியும் விருப்பமில்லை. இதற்கெல்லாம் முழுக் காரணம் படித்த மக்களின் அறியாமை என்றுதான் சொல்வேன்.
நம்மைப் போன்றவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன் படுத்தத் தொடங்கிய பல பொருட்கள் இன்று நம் அழிவிற்கு துணை நிற்கின்றன.குளிர் காலத்திலும் ஏ.சி போட்டு உறங்குபவர்கள் நம்மில் பலர். இந்த புவி வெப்பமாதல் குறித்து பல ஊடகங்கள் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தாலும் நித்யானந்தர் பிரச்சினை அளவிற்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப் படவில்லை.
இதைத் தடுக்க பல ஊடகங்கள் சொன்ன வழிமுறைகளை நம்மில் எத்தனை பேர் பின் பற்றியிருக்கிறோம்? இதைத் தடுக்க நம்முடைய அன்றாட செயல்பாடுகளை நெறிமுறை படுத்தினாலே போதும். சரி இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
இவை பலர் சொன்னதுதான். ஆனால் இவற்றை எப்படி நடைமுறை படுத்தலாம் என்பதற்கு சில வழிமுறைகள்
மின்சார பயன்பாட்டைக் குறைத்தல்
(எனர்ஜி சேவர் பல்ப்)
- நம்மில் பலர் உபயோகிக்கும் "குண்டு பல்ப்" அதிக அளவு மின்சாரம் உறிஞ்சக் கூடியது. இதனைத் தவிர்த்து இன்று மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய எனர்ஜி சேவர் பல்புகளை பயன்படுத்த வேண்டும். இத்தகைய குண்டு பல்புகள் அதிக அளவு கார்பன்டை-ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது.
- வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை தேவையில்லாமல் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஏ.சி என்பது வெப்பமிகு நாட்களில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். என்னைக் கேட்டால் அதை நாம் முற்றிலும் தவிர்த்து மாற்று ஏற்பாடாக மின்சாரக் காத்தாடிகளை பயன்படுத்தலாம். அதோடில்லாமல் வெப்பமிகு நாட்களில் வீட்டின் மேல் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கலாம்.
- ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்கும் போது அவற்றின் எனர்ஜி சேவர் சதவீதம் பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் கூட கார்பன்டை-ஆக்சைடின் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்.
- நாம் உபயோகிக்கும் ஹீட்டர் என சொல்லக் கூடிய தண்ணீரை சூடுபடுத்தும் கருவிதான் நம் முதல் எதிரி. இவை வெளியிடும் கார்பன்டை-ஆக்சைடு பன்மடங்கு அளவிலானது. இதற்கு மாற்றாக சோலார் வாட்டர் ஹீட்டிங் முறையை பயன்படுத்தலாம்.
புவி வெப்பமடைதல், எரிசக்தி பாதுகாப்பு: இரட்டை சவாலை இந்தியா சமாளிக்கும்
யோசித்துப் பாருங்கள் இதைக்கூட செய்ய இயலவில்லை என்றால் நாம் மனிதர்களாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
No comments:
Post a Comment