சூர்யாவின் 25வது படத்தை ஹரி இயக்குகிறார். படத்தின் பெயர் சிங்கம். ஆறு, வேல் படங்களைப் போல இதுவும் அதிரடி ஆக்ஷன். அருந்ததீ புகழ் அனுஷ்கா ஹீரோயின். காமெடிக்கு விவேக். சாமி படத்துக்குப் பிறகு ஹரி இயக்கும் பொலீஸ் கதையிது. அதனால்தானோ தெரியவில்லை, சாமிக்குப் பிறகு ஹரி படத்தில் நடிக்காமலிருந்த விவேக் இதில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதுவரை ஹரி படங்களுக்கு இசையமைக்காத தேவி ஸ்ரீபிரசாத் முதல் முறையாக சிங்கத்துக்கு இசையமைக்கிறார். ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் கேமரா.
பொலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சூர்யா. காக்க காக்க படத்துக்குப் பிறகு அவர் காக்கி அணியும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தவர்கள் தயாரிப்பில் உருவாகிற படமாக இருந்தால் கோடிக்கணக்கில் செட்போடும் இயக்குனர்கள் அதுவே தங்கள் சொந்த தயாரிப்பு என்றால், ஓலைகுடிசையே சூப்பர் என்பார்கள். இதற்கு உதாரணமாக சொந்தப்படம் எடுக்கிறஇயக்குனர்களில் பலரை சொல்லலாம். இப்படிப்பட்ட இயக்குனர்களுக்கே சவால்விடுவார் போலிருக்கிறது சூர்யா.
சிங்கம் இவரது சொந்த(க்காரர்) படம். இப்படத்தில் வரும் பாடல் காட்சிக்காகதுபாய் போயிருந்தது சிங்கம் டீம். பொதுவாக சூர்யா படத்தின் ஒரு பாடல்காட்சிக்கு குறைந்தது பத்து அல்லது பதினைந்து நாட்கள் எடுத்துக்கொள்வதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை ஏழு நாட்களில் இரண்டுபாடல்களை எடுத்து முடிச்சிரலாம் என்றாராம் சூர்யா. படத்தின் இயக்குனர் ஹரிசும்மாவே சுறுசுறுப்பு. சூர்யா இப்படி சொன்னதும் பெண்டு நிமிர்த்திவிட்டாராம்நடனக்கலைஞர்களை.
'சில்லுனு ஒரு காதல்', 'பருத்திவீரன்' ஆகிய வெற்றிப் படங்களைத்தந்தகே.ஈ.ஞானவேல்ராஜாவின் 'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம், பிக்பிக்சர்நிறுவனத்துடன் இணைந்து 'சிங்கம்' திரைப்படத்தைத் தயாரிக்கஇருக்கிறது.
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!
No comments:
Post a Comment