என்ன தமிழ் படமா…?
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை, இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமாவையும் கலாய்த்து காயபோட்டு இருக்கிறார்கள்.
சிவா, தீஷாபாண்டே, எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறை ஆடை மூர்த்தி, மனோபாலா, டெல்லிகனேஷ், பரவை முனியம்மா, கஸ்தூரி.
இசை : கண்ணன்
இயக்கம் : அமுதன்
தயாரிப்பு: தயாநிதி அழகிரி
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் எடுக்காத புதுமுயற்ச்சியை இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி-ல் தொடங்கி மாதவன் வரை அனைவரின் நடிப்பயையும் யார் மனதும் புண்படாமல் நகைச்சுவையாக எடுத்துள்ளனர். காதல், செண்டிமண்ட் , வில்லன் , நட்பு என ஒரு படத்திற்கு உள்ள அத்தனையையும் இந்த ஒரே படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் எடுத்திருக்கும் படம் தான் இந்த ’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் கதை. ஆன்குழந்தை விரும்பாத கிராமத்தில் பிறக்கும் பிறக்கும் படத்தின் நாயகன் சிவாவை கள்ளிப்பால் கொடுப்பதிலிருந்து காப்பாற்றி சென்னைக்கு அனுப்புகிறார் சிவாவின் பாட்டியாக வரும் பரவை முனியம்மா படத்தின் முதல் காட்சியிலே கொஞ்சம் வித்தியாசத்தை காட்டியுள்ளனர்.
சென்னைக்கு வந்து இறங்கியவுடன் ஆட்டோவில் இருந்து தொடங்கும் சிரிப்பலை படம் முடியும் வரை நீடிக்கிறது. நாயகனின் நண்பர்களாக எம்.எஸ்.பாஸ்கர் , வெ.ஆ.மூர்த்தி, மனோபாலா அனைவரின் நடிப்பும் பாராட்டும் படி இருக்கிறது. இப்போது வரும் படங்களில் எல்லாம் ஹிரோவுக்கு வைக்கும் ஒபனிங் பாடலில் இயக்குநர் ஒரு காட்சியிலாவது வந்து ஆட்டம் போடவேண்டும் என்று நினைப்பு இனி இருக்காது.
எம்.எஸ்.பாஸ்கர் நாயகனுக்கு மட்டும் பலம் அல்ல படத்திற்கும் பலம் தான். அதே போல் வெ.ஆ.மூர்த்தி-ஐ படத்தில் இளமையாக காட்டியுள்ளனர் அவர் அடிக்கும் ஒவ்வொரு காமெடியும் பளிச். அடுத்து மனோபாலா பெண்களை கவர அவர் சைக்கிளில் சென்று கீழே விழுவதில் இருந்து அவருக்கு படத்தில் கொடுத்திருக்கும் ஆடைகள் வரை அத்தனையும் சூப்பர். நாயகன் சிவாவை பற்றி சொல்ல வேண்டுமானால் படத்திற்கு சரியான நடிகர் இவர் தான் என்று சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு காட்சிகளிலும் எந்த நடிகரை அவர் காட்சியில் கொண்டு வருகிறாறோ அதற்கு தகுந்த மாதிரி உடல் அசைவிலும் நம் உடலை அசைத்து சிரிக்க வைக்கிறார்.அடுத்து படத்தின் நாயகி மும்பை தீஷாபாண்டே வழக்கமாக தமிழ்பட நாயகிகள் செய்யும் வேலையை சரியாக செய்துள்ளார். கிராபிக்ஸ் காட்சியும் படத்தில் இருக்கிறது கஸ்தூரி ஆடும் ஒரு பாடல் காட்சியில் சென்சார் என்று ஒரு கிராபிக்ஸ் வருகிறது. இயக்குநர் அமுதன் பதியவர் என்று சொல்ல முடியாத வகையில் திரைக்கதையின் வேகத்திலும் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகள் ஏதுவும் போரடிக்காமல் சென்றுள்ளார்.
பச்ச மஞ்சள் சுட்டது - தமிழ் படம்
ஒரே பாட்டில் நாயகன் பணக்காரர் ஆவதிலிருந்து வில்லன்களை எதிர்க்கும் ஒவ்வொரு காட்சிகளும் அருமை. இசையில் கண்ணனின் ஒமகசீயா.. பாடல் நன்றாக வந்துள்ளது மற்ற பாடல்களும் பரவாயில்லை. அடுத்து ஓளிப்பதிவில் நிரவ்ஷா சிவாவை மட்டுமல்ல தமிழ்சினிமாவின் அத்தனை நாயகர்களையும் காட்சிகளில் கொண்டுவந்துள்ளார்.படத்தின் அத்தனை காட்சிகளும் நகைச்சுவை பின்னனியுடன் தான் வருகிறது இது தான் படத்திற்கு மிகப்பெரிய பலம். ’கோவா’-வை தாண்டி ’தமிழ்படம்’ செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் இந்த தமிழ்படம் ஒரு சிரிப்பு கலாட்டா.
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!
No comments:
Post a Comment