82nd ACADEMY AWARD
உலகமெங்கும் அவதார் திரைப்படம் வசூலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.உலகம் முழுவதும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம், 9 ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் | |
படம் | தயாரிப்பாளர் |
An Education | Finola Dwyer, Amanda Posey |
A Serious Man | Coen Brothers |
District 9 | Peter Jackson |
The Blind Side | To be Determined |
Inglourious Basterds | Lawrence Bender |
Precious | Lee Daniels |
The Hurt Locker | To be Determined |
Up | Jonas Rivera |
Avatar | James Cameron, Jon Lendau |
Up In The Air | Daniel Dubiecki |
உலகிலேயே மிக உயர்ந்த சினிமா விருதாக ஆஸ்கார் விருது உள்ளது. 82-வது ஆண்டாக இந்த விருது விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக சினிமா துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இப்படி பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து தான் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த டைரக்டர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அவதார் படம், மற்றும் தி ஹர்ட் லாக்கர் படம் ஆகியவை தலா 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படம் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
சிறந்த படம், சிறந்த டைரக்டர், சிறந்த ஒளிப்பதிவு, கலை இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த விசுவல் எபக்ட்ஸ் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் அவதார் படம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கணவன்-முன்னாள் மனைவி படங்கள் மோதல்!
அவதார் படத்தை டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரோன் இயக்கி இருக்கிறார். இதே போல 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இன்னொரு படம் தி ஹர்ட் லாக்கர் படம், ஈராக் போரை பற்றியது. இந்த படத்தை, அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரோனின் முன்னாள் மனைவி கேதரீன் பிக்லோ இயக்கி இருக்கிறார்.
சிறந்த டைரக்டர் விருதுக்காக 5 டைரக்டர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இந்த 2 பேருடன், இன்குளோரியஸ் பாஸ்ட்டர்டு படத்தை இயக்கிய குயென்டைன் டாராண்டினோ, பிரீஷியஸ் படத்தை டைரக்டு செய்த லீ டேனியல்ஸ், அப் இன் தி ஏர் படத்தை இயக்கிய ஜேசன் ரீட்மன் ஆகியோர் பெயர்கள் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
சிறந்த படத்துக்கான விருதுக்கு 11 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. நடிகருக்கான விருதுக்கு ஜெப் பிரிட்ஜஸ்(கிரேசி ஹார்ட்), ஜார்ஜ் குளூனி (அப் இன் தி ஏர்), காலின் பிர்த் ( தி சிங்கிள் மேன்),மோர்கன் பிரிமேன்( இன்விக்டஸ்), ஜெர்மி ரெனெர் (தி ஹர்ட் லாக்கர்) ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகைக்கான விருதுக்கு சாண்டிரா புல்லாக் (தி பிளைண்டு சைடு), மெரில் ஸ்ட்ரீப் (ஜுலி ஜுலியா), ஹெலன் மிரன்( தி லாஸ்ட் ஸ்டேஷன்), காரே மல்லிகன் (ஏன் எடுகேஷன்), கபோரி சிடிபே (ப்ரீஷியஸ்).
இந்த வருட ஆஸ்கர் நாமினேஷன் கிளிக்
ஒஸ்கார் விருது தயர்நிலையில்
ஆஸ்கார் விருதுக்கு இந்திப்படம்
அமெரிக்க டைரக்டர் கிரெக் ஹெல்வி டைரக்டு செய்த இந்தி படம் கவி, குறும் படப்பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதை குனீத் மோங்கா, ஹரீஷ் அமீன், ஹெல்வி ஆகியோர் தயாரித்து உள்ளனர்.
இந்த படம் குழந்தை தொழிலாளர் பிரச்சினையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒரு சிறுவன், கிரிக்கெட் விளையாட விரும்புகிறான். ஆனால் எப்படி படிப்பை விட்டு விட்டு செங்கற்சூளையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறான் என்பதை இந்த படம் சித்தரிக்கிறது.8 நாட்களில் படமாக்கப்பட்ட படம் இது. படப்பிடிப்பு செலவு வெறும் 14 லட்சம் ரூபாய் தான்.
2009ம் ஆண்டு 'ஸ்லாம்டாக் மில்லியினர்' படத்திற்காக ஆஸ்கார் விருது, கோல்டன் கிளோப் விருது மற்றும் கிராமி விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளை தட்டிச் சென்ற ரகுமானுக்கு இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது கைநழுவிப் போனது.இந்த ஆண்டு 'கப்பிள்ஸ் ரிட்ரீட்' என்ற படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த நா நா... என்ற பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த தமிழ் பாடலை ஏ.ஆர்.ரகுமான் எழுத அவருடைய மகன் பாடியிருந்தார். இந்தப் பாடல் ஆஸ்கார் விருது பெறும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலில் அந்த பாடல் இடம் பெறாமல் போய் விட்டது. இதனால் ரகுமானின் தீவிர ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!
No comments:
Post a Comment