Monday, February 15, 2010

மயிலிறகாய் ஒரு காதல்

பிப்ரவரி 14 – கற்பை சூறையாடும் தினம்

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது


கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது. கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.5 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.

காதலிப்போர் கவனத்திற்க்கு :

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.
பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல, ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.


சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.

காதலிப்பதால் ஏற்படும் இழப்புகள் :

இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.

காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்.

படிக்கும் இளைஞர்களே!

காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றத.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

மன்னிக்கவும் பிந்திய தகவல்.

நன்றி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!