Monday, February 1, 2010

டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் நோயாகும்.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

எமது நாட்டில் தற்சமயம் டெங்கு நோய் அதிகளவில் பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் நோயாகும். இது ஏடிஸ் ஏஜிப்டி எனும் ஒரு வகை நூளம்பினால் பரவுகிறது. இந்நோய் தாக்கத்தை 4 வகையாகப் பிரிக்கப்படுகிறது. வகை1, வகை2,வகை3, வகை4 ஆகும். இந்நோய்கான அறிகுறியாக திடீர் காய்ச்சல் ஏற்பட்டு 40-45 டிகிரி செல்ஸியஸ் வரை உடலின் உஷ்ணம் அதிகாரிக்கும்.

உடலில் சில கட்டிகள் அல்லது வெடிப்புக்கள், நோய் தொற்றிய 3,4 நாட்களில் உடலில் நடுப்பகுதியில் தோன்றி முகம், கை,கால் என பரவத்தொடங்கும். ஆத்தோடு தசை வலி, மூட்டுக்களில் வலி, தலைவலி என்பன உருவாகும்.

ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதை கண்டறிய அவருடைய வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல் வேண்டும். அதாவது இரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லிய+கோசைட்ஸ் என்ற வெள்ளை இரத்த அணுக்களின் அளவு 4000-10,000 ஆகும். இதில் த்ராம்போசைட்டோபீனியா டெங்கு காய்ச்சலின் போது இரத்தத்தில் உள்ள வட்டுக்களின் குறைவாக காணப்படும்.

டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது.

கொசுக்கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் இந்த வகை கொசுக்கள் ஒருவித வெள்ளைநிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இதனை ஒரு பாமரன் கூட கண்டுபிடிக்க இயலும். இந்த வகை கொசுக்கள் நீரில் வசிப்பவை. மற்றும் 100-200 மீ வரை, பறக்கும் தன்மை கொண்டவை. இந்த கொசு, டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளியின் இரத்தம் உறிஞ்சும்போது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்றுவிடுகிறது.

டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்டிபாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் இரத்த நிணநீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டு பிடிக்க பயன் படுத்தப்படும்.

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன?

பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் கொசு உற்பத்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே கொசுக்கள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் கொசுக்கள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.

மிகவும் முககியம் – கொசுக்கள் முட்டையிடும் நீர் தேங்குவதை தடுத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்?

  • கண்களில் பின்புறம் வலி
  • தசை வலி
  • மூட்டு வலி
  • தோலில் சினைப்பு
  • வயிறு வலி, வாந்தி

டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?

டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும். இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.1990 ஆம் ஆண்டு நூளம்பு மூலம் பரவும் முக்கியமான நோயாக டெங்கு இனம் காணப்பட்டது. ஓவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கானோர் இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இது ஒரு தொற்று நோயாக இருப்பதால் இலகுவில் அதிகமானோருக்கு பரவுகிறது. அதிலும் நெருக்கடியான பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பரவுகிறது. உலகம் முழுவதும் இவ்வாறான நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியா நாடுகள் மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் நூளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தாமையே… எமது புறச்சூழலில் நூளம்பு பெருக கூடிய வகையில் குப்பைகளையோ, நீர் தேக்கங்களையோ வைக்க கூடாது சில வீட்டுறே கூறையில் கூட டயர்களையோ அல்லது மழை நீர் ஒழுங்கான முறையில் வடிந்து செல்ல முடியாத அளவிற்கு குப்பைகளையோ தேங்கி நிற்பதை காணக்கூடியதாக இருக்கும் அவை நூளம்பு பெருக்கத்திற்கு வழி வகுக்கிறது. இவ்வாறாக தேங்கி நிற்கும் நீர்களில் இவ்வகை நூளம்புகள் முட்டையிட்டு பெருகுகின்றது.

டெங்கு நோயாளியை பொறுத்தவரை அவருக்கு ஓய்வும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கக் கூடிய அசிட்டாமினோபென் மாத்திரைகள் ஆகியவையும் அவசியம். நோய் திட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு அதிகூடிய அளவிற்கு போகும் போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது அவசியம்.

எமது நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா?

ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?

1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது?

இந்த கொசு, எடீஸ் எஜிப்டி இருட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் கொசு தேங்கி கிடக்கும் நீரின்

ஈரர்ர்ற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு மோந்தஸ். டெங்கு நோயின் பாதிப்புக்கள்

சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் இ பொதுமக்கள் அதிமாக நடமாடும் இடங்களில் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் சுற்றாடலை துப்பரவாக வைத்திருக்கும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு தை மாதம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட முடிவுகள் Clickhere


என்றென்றும் அன்புடன்.
ந.பிரேமகுமார்

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!