செவ்வாய் கிரகத்தில் மர்ம பெண் நடமாட்டம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கிருந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஸ்பிரிட் என்ற செயற்கை கோள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த செயற்கை கோள் ஆயிரக்கணக்கான புகைப் படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த ரோபாட் செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து சென்று பல்வேறு படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் ஒரு படத்தை அனுப்பியது. அதை நாசா கடந்த 2-ந் தேதி இன்டர்நெட் மூலம் வெளியிட்டது. அந்த படம் முழு வதும் சிவப்பு மணல் களாகவும், பாறை களாகவும் காட்சி தருகின்றன.
இங்கிலாந்து பத்திரிகை ஒன்று இந்த படத்தை முழுமையாக ஆய்வு செய்தது. அதில் படத்தின் இடது மூலையில் ஒரு இடத்தில் பாறை மீது மனித உருவம் இருப்பது போல தென்பட்டது. அந்த உருவம் பெண் போல தெரிகிறது. பாறையில் கையை ஊன்றியபடி இறங்கி வருவது போல மங்கலாக தெரிகிறது.
இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள அந்த பத்திரிகை செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கான ஆதாரம் இது என்று குறிப்பிட்டு உள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு தரப்பினர் இது மனித உருவம் தான் என்று அடித்து சொல்கிறார்கள். மற்றவர்கள் பாறையின் வடிவம் தான் அப்படி தெரிகிறது என்கிறார்கள். விஞ்ஞானிகள் சிலர் இது ஏதோ ஒன்றின் நிழல் என்கிறார்கள். ஆனால் நாசா விஞ்ஞானிகள் இது பற்றி இது வரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.
ஆனால் ஐரோப்பிய நாடு களில் கிறிஸ்தவர்கள் சிலர் இது மேரி மாதாவின் உருவம் என்று கூறினார்கள். இது கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பக்தி பரவசத்துடன் அந்த படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
அது மனிதனாக இருந்தால் பூமியில் வாழும் மனிதனை விட அந்த மனிதன் பெரிய உருவமாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறினார்கள். டென்மார்க்கை சேர்ந்த பத்திரிகை ஒன்று செவ்வாய் கிரகத்தில் முன்பு மனிதர்கள் வாழ்ந்து இருக்கலாம். அப் போது அமைக்கப்பட்ட சிலை தான் இது. பின்னர் அந்த கிரகம் அழிந்து இருக்கலாம் என்று கூறியுள்ளது.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறு கின்றனர். நாசா விஞ்ஞானிகள் இந்த படத்தை முழுமையாக ஆய்வு செய்து கருத்து தெரி வித்தால் தான் சரியான தகவல் தெரியவரும். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை ஏற்கனவே நாசா வெளியிட்டது. இதனால் அங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் மனித உருவம் தென்படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு உறைந்ததால் உருவான மேகங்கள் இருப்பதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இந்த கருத்தின் அடிப்படையில் அந்த உருவம் பெண்ணாகவோ அல்லது வேறு உயிரினமாகவோ இருக்கலாம் என்று தெரிய வருகிறது. எது எப்படியோ செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது என்ன என்பது குறித்த சர்ச்சை இணைய தளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. இது தொடர்பாக உறுதியாக நாசா எதையும் தெரிவிக்காத வரையில் இந்த சர்ச்சை தொடரும் என்பதில் சந்தேக மில்லை
No comments:
Post a Comment