Saturday, September 12, 2009

தற்கொலை செய்யும் கடல் வாழ் உயிரினங்கள்

2-2627

கூட்டமாக விலங்குகள் தற்கொலை செய்வதை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? படு பயங்கர அதிர்ச்சியூட்டும் இந்த தற்கொலையில் உயிரிழந்திருக்கின்றன ஏராளம் டால்பின்கள் மற்றும் சுறா மீன்கள்.

கூட்டம் கூட்டமாக கடற்கரையோரமாக வருகின்றன டால்பின்கள், பின்பு அங்கேயே மரணித்து விடுகின்றன. சுறா மீன்களும் அப்படியே !

இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணம் புரியாமல் விழிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆளுக்கொரு கணிப்பை வெளியிடும் அவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் ஏராளம் ஏராளம்

beached-whales-australia-photo3463

கடலுக்கு அடியில் உள்ள ஏதேனும் மாற்றங்கள் இத்தகைய கூட்டுத் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கலாம் என்பது பலர் சொல்லும் கருத்து !

சுறா மீன்கள் மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரையோரமாக வந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன !

கடற்கரையோரமாக வரும் சுறாமீன்களையும் டால்பின்களையும், மீண்டும் கொண்டு கடலுக்குள் விடும் மீட்புப் பணியும் இந்த இடங்களில் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன.

இந்த வாரம் நிகழ்ந்த இந்த தற்கொலை கடந்த சிலமாதங்களில் மட்டும் ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஐந்து நிகழ்வுகளிலுமாக சுமார் 500 சுறா மீன்கள் மடிந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது


whale1

ஆஸ்திரேலியாவைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த தற்கொலை நிகழ்வுகள் நடக்கின்றன. இங்கிலாந்துப் பகுதியில் இறந்து போன டால்பின்களைப் பரிசோதித்தபோது அவை அதிக அளவில் மண்ணை அள்ளி உண்டதாக தெரியவந்திருக்கிறது.

இந்த தற்கொலைகளுக்கான காரணம் என்ன ?

மாசு படும் கடலா ? ஆழ்கடல் பயங்கரங்களா ? ஆழ்கடல் உயிரிகளினால் ஏற்பட்ட பயமா ? இல்லை ஏதேனும் அதிர்வலைகளின் பாதிப்பா ? என குழம்பிப் போயிருக்கிறது விஞ்ஞானம், நம்மைப் போலவே !

6-1814

>>>>>>>>>>>>>>>>>>>>>>>சுனாமி ஏற்பட ஒரு சில மணி நேரங்களுக்கு முன் கடல் மீன்கள் கரையில் வந்து குதித்து குதித்து செத்துப் போனது. பினாங்கு தீவில் இது ஏற்பட்டதைக் கண்டேன். ஒரு வேளை கடலுக்குள் பொருளாதார நெருக்கடியோ>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> :)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!