Sunday, April 26, 2009

உங்களுக்குத் தெரியுமா?

வாரன் எட்வர்ட் பஃபெட் என்பவார் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும் தொழிலதிபரும் கொடை வள்ளலும் ஆவார். பில் கேட்சிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது செல்வந்தராகக் கணிக்கப்படுகிறார். இவரது சொத்து 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான வாரன் பஃபெட் பில் கேட்சு ஆகியோரே மிகப் பெரும் கொடையாளிகளும் ஆவர் இவர்கள் இதுவரை முறையே 40 , 28 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடை செய்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!