Saturday, April 24, 2010

கார்லஸ் ஸ்லிம் முதலிடத்தில்

2010இன் உலக பணக்காரர் வரிசையில் கார்லஸ் ஸ்லிம் முதலிடத்தில்

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொலை தொடர்பு நிறுவன அதிபர் கார்லஸ் ஸ்லிம் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 53.5 பில்லியன் டொலராகும்.



2ஆவது இடத்தில் மைக்ரோ சொப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் இருக்கிறார். அவரது மொத்த சொத்து 53 பில்லியன் டொலராகும். அமெரிக்காவில் முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் வாரன் பப்பட் 47 பில்லியன் டொலர் மதிப்பு சொத்துக்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் முக்கேஷ் அம்பானியும், லட்சுமி மிட்டலும் இடம் பெற்றுள்ளனர். முகேஷ் அம்பானி 4ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 29 பில்லியன் டொலர்.

5ஆவது இடத்தில் இரும்பு தொழிலில் கொடிகட்டி பறக்கும் லட்சுமி மிட்டல் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 28.7 பில்லியன் டொலராகும்.

அமெரிக்காவின் லோரன்ஸ் எலிசன் (28 பில்லியன் டொலர்) 6ஆவது இடத்திலும், பிரான்சின் பெர்னாட் (27.5 பில்லியன் டொலர்) 7ஆவது இடத்திலும், பிரேசில் நாட்டின் இகி படிஸ்டா (27 பில்லியன் டொலர்) 8ஆவது இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் அமன்சியோ (25 பில்லியன் டொலர்) 9ஆவது இடத்திலும்,



ஜெர்மனியின் கார்ல் அல்பிரசட் (23.5 பில்லியன் டொலர்) 10ஆவது இடத்திலும் உள்ளனர்

நன்றி அன்புடன்
PREMAKUMAR.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!