Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவனும் ஜனாதிபதித் தேர்தலும்.

ஆயிரத்தில் ஒருவன் படம் சில ஆங்கிலப் படங்களின் தழுவலாக இருப்பதை யாராவது நிரூபித்தால், நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன் என்றார் இயக்குநர் செல்வராகவன்.
பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரத்தில் ஒருவன் படம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியாததால், வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கூறுகிறது.

அதே நேரம் மீடியாவில், வேறு விதமான விமர்சனங்களை செல்வராகவன் எதிர்கொள்ள வேண்டிய சூழல்.
எனவே உடனடியாக பிரஸ் மீட்டுக்கு அழைக்கப்பட்டனர் செய்தியாளர்கள்.
Selvaragavan and Aishwarya
இந்த கூட்டத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?' என்று கேள்வி எழுப்பினர்.

இதைக் கேட்டதும் மிகவும் கடுப்பான செல்வராகவன், 'இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்..." என்றார்.
அடுத்ததாக, 'படத்தில் லாஜிக்கே இல்லையே?' என்று கேட்டதற்கு, "ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள் (!??). அவதார் படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்.

இப்படி இருந்தால் வித்தியாசமான படங்கள் எப்படி வரும்? ஹாலிவுட்டை விட அட்டகாசமான படைப்புகளை இங்கேயே தர முடியும்" என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், தற்போது இன்டெர்நெட் மூலமாகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இம்மாதம் 26ல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.




இதற்கு முந்தைய தேர்தல்களில் இல்லாதவகையில் இத்தேர்தலில் முற்றிலும் புதுமையாக இன்டெர்நெட் மூலமாகவும் இரு தரப்பினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ-மெயில் மற்றும் இணையதளங்கள் மூலமாக தீவிர பிரசாரம் நடக்கிறது. இத்தேர்தலில் இன்டெர்நெட் மூலமாக பிரசாரம் செய்வதற்கு இரு கட்சிகளுமே அதிகமாக பணம் செலவுசெய்துள்ளனர்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!