Wednesday, August 12, 2009

அறிவியல் வினோதங்கள்

1. Koalas:
ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். (நல்ல ஷிபிட் முறைதான்).



2. Basenji:
ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)


3. Hagfish:
இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும். (இது அதிசயமே!).


4. Owl:
ஆந்தைகளால் எலும்பு, இறகு மற்றும் விலங்குகளின் முடி போன்றவைகளை ஜீரணிக்க முடியாது. எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து முடி எலும்பு போன்றவற்றை சுருட்டி வாந்தி எடுத்துவிடும். (ஐயோ பாவம்….)


5. Kissing bugs:
இந்த பூச்சிக்கு மனித இரத்தம் ரெம்ப பிடிக்கும் அதுவும் உதட்டில் உள்ள இரத்தம் தான் பிடிக்குமாம். (அதனால்தான் இந்த பெயரோ?)


6. Spitting cobra:
இந்தவகை பாம்புகளால் தனது விஷத்தை சுமார் எட்டு அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும் திறனுடையது. அதுவுன் நம்முடைய கண்ணை நோக்கித்தான். (ரெம்ப கவனமாத்தான் இருக்கணும்).


7. Hyena:
உலகில் உள்ள எல்லா படைப்புகளிலும் ஆண்தான் பெண் உயிரினத்தைவிட பெரியதாக இருக்கும். ஆனால் இவற்றில் பெண் தான் உருவத்தில் பெரியதாக இருக்கும். (இங்க பெண்ணாதிக்கம் அதிகம் போலும்).


8. Jaeger:
இந்த பறவைகள் எந்த கடல் பறவைகள் கொஞ்சம் வீக்கா இருக்கோ அதனை வசமா பிடித்து தனது வாயில் என்ன உணவு இருக்கிறதோ அதனை அந்த கடல் பறவையின் வாய்க்குள் திணிக்கும். பின்னர் திணித்ததை வெளிய வாந்தி எடுக்க வைத்து கொடுமை செய்யும். (இருந்தாலும் ரெம்ப மோசம்தான்!)
இதுதான் கொடுமைக்கார பறவை



இதுதான் அப்பாவி பறவை (பார்த்தல் பாவமா இல்லே!)




9. Booby:

பாவம் இந்த கடல் பறவைகள் ஏனென்றால் இவை அதிக கவனமாக இருப்பதில்லை இதனால் மனிதர்கள் எளிதாக பிடித்துவிடமுடியும். (முட்டாபய பறவை..)



10.Green Herons:
இந்த பறவைகள் அதி புத்திசாலியானது. சின்ன வண்டுகள் அல்லது பூச்சிகளை தண்ணீரின் மீது போடும் மீன்கள் இரைதான் என்று மேல வந்தால் அவ்வளவுதான் ஒரு வினாடிக்குள் இதன் வாய்க்குள் போய்விடவேண்டியதுதான். (உக்காந்து யோசிப்பாங்களோ?)

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!