Saturday, July 25, 2009

ஆண்டு நிறைவில் நிறைவில்....

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார்கள்.....போகட்டுமே வயதுதானே !என்பவர்களும் இருக்கிறார்கள் , " ஐயோ இன்னுமொரு வருடம் ஓடி போயிடுச்சா " இந்த வருடத்திலாவது ஏதாவது சாதிக்க வேண்டும் "என்று உறுதி மொழி எடுத்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
மேல சும்மா நிகழ்ச்சி முன்னோட்டம்.......

இனி விசயத்துக்கு வருவோம்.
வழமையாக நாங்கள் ஒவ்வொரு வருட நிறைவையும் ஒவ்வோர் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். அதில அனேகமானது எல்லோருக்கும் தெரிந்த...

1 -ஆண்டு விழா
25 -வெள்ளி விழா
50- பொன் விழா
100-நூற்றாண்டு விழா .
அனால் ஒவ்வொரு ஆண்டு நிறைவிற்கும் ஒவ்வோர் பெயருண்டு அதைத்தான் இங்கே நாங்கள் அறிந்து கொள்ள போகிறோம்.

இடையிடையே இடைவெளி இருக்கும் தெரிந்தவர்கள் அதனை கண்டு பிடித்து சொல்லுங்கள் இல்லையென்றால் பின்னூட்டத்தில் பார்க்கலாம்.
  • 1 ஆண்டு - காகித விழா

  • 2 ஆண்டு - பருத்தி விழா

  • 3 ஆண்டு - தோல் விழா

  • 4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா

  • 5 ஆண்டு - மர விழா

  • 6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா

  • 7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா

  • 8 ஆண்டு - வெண்கல விழா

  • 9 ஆண்டு - மண் கலச விழா

  • 10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா

  • 11 ஆண்டு - எஃகு விழா

  • 12 ஆண்டு - லினன் விழா

  • 13 ஆண்டு - பின்னல் விழா

  • 14 ஆண்டு - தந்த விழா

  • 15 ஆண்டு - படிக விழா

  • 20 ஆண்டு - பீங்கான் விழா

  • 25 ஆண்டு - வெள்ளி விழா

  • 30 ஆண்டு - முத்து விழா

  • 40 ஆண்டு - மாணிக்க விழா

  • 50 ஆண்டு - பொன் விழா

  • 60 ஆண்டு - வைர விழா

  • 75 ஆண்டு - பவள விழா

  • 100 ஆண்டு - நூற்றாண்டு விழா

    இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லுங்க..........

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!