Monday, July 20, 2009

மொபைல் போன் தொழில் நுட்ப சொற்கள்


மொபைல் போன் குறித்த தகவல்களைத் தரும் கட்டுரையிலும் அவற் றின் பயன்பாடு சார்ந்த தகவல் தொகுப்புகளிலும் பல தொழில் நுட்ப சொற்கள் காணப்படுகின்றன. சில குறிப்புகள் நாம் ஏற்கனவே அறிந்தவை யாகவும், சில நாம் அறிந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆனால் அறியாதவை யாகவும் இருக்கின்றன. சில சொற்களின் சரியான பொருள் தெரிந்தால் தான் அது சார்ந்த பயன்பாட்டினை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.



GSM Global : System for Mobile communications என் பதன் சுருக்கம். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் அவற்றிற்கான சர்வீஸ் தரும் நிறுவனங்கள் மற்றும் உலகில் உள்ள மற்ற சர்வீஸ் புரவைடர்களுடன் தொடர்பு கொள்ள உதவிடும் தொழில் நுட்பம். இந்த போன்களை சிம் கார்டு இணைத்துப் பயன்படுத்தலாம்.


CDMA: Code division multiple access இன்னொரு வகை மொபைல் தொழில் நுட்பம்.இதனைப் பயன்படுத்துகையில் அப்போது கிடைக்கும் முழு அலை வரிசையின் திறனை போன் தொடர்புக்குப் பயன்படுத்த முடியும். இதனால் திறன் கூடிய துல்லிதமான ஒலி கிடைக்கும். டேட்டா பரிமாற்றமும் எளிதாகவும் விரை வாகவும் நடைபெறும். சில சி.டி.எம்.ஏ. மொபைல் போன்களில் சிம் கார்ட் அதன் போர்டில் இணைத்தே தரப்படும். எனவே இதற்கென தனி போன் மாடல்கள் உருவாக்கப்பட்டு விற்பனையாகின்றன. இதனால் இந்த வகை மாடல்கள் ஜி.எஸ். எம். மாடல்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே உள் ளன.

இந்த தொழில் நுட்பம் முதல் முதலாக இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் அணியில் இருந்த நாடுகளால் ஜெர்மனி படைகளின் முயற்சிகளை முறியடிக்க தொலை தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்டது.


Bluetooth : புளுடூத் –– வயர் இணைப்பு எதுவுமின்றி இரு தொலை தொடர்பு சாதனங்களுக்கிடையே டேட்டா பரி மாற்றம் மற்றும் சாதனங்களைக் கட்டுப்படுத்த வகை செய்திடும் தொழில் நுட்பம். இதனுடன் சார்ந்த சில தொழில் நுட்ப பிரிவுகளையும் பார்க்கலாம். Bluetooth 2.0 : EDR என்ற வசதி இணைந்த புளுடூத் செயல்பாடு. புளுடூத் வசதி இயக்கப்பட்ட சாதனங்களுக்கிடையே விரைவாக டேட்டா பரிமாற்றம் ஏற்படுவதனை இதன் மூலம் குறிக்கிறோம்.


A2DP Advanced Audio Distribution Profile: புளுடூத் வசதி இயக்கப்பட்ட சாதனங்களுக்கிடையே சிறந்த முறையில் ஆடியோவினை கேட்டு மகிழ இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீரியோ ரிசீவர் இருந்தால் ஸ்டீரியோ வகையில் ஒலி வெளிப்பாடு கிடைக்கும். ஹெட் செட்கள் மூலமாகவும் இந்த சிறப் பான இசை வெளிப்பாட்டினைக் கேட்டு மகிழலாம். அதற்கு உதவும் தொழில் நுட் பம் இது.


AVRCP Audio/Video Remote Control Profile: ��lz : புளுடூத் வசதி இயக்கப்பட்ட சாதனங் களுக்கிடையே டேட்டா பரிமாற்றம் மட்டு மின்றி ஒரு சாதனத்தை இன்னொன்றின் மூலம் கட்டுப்படுத்தும் வசதியை இந்த தொழில் நுட்பம் தருகிறது. எடுத்துக் காட் டாக உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் மீடியா பிளேயரை புளுடூத் இயக்கப்பட்ட மொபைல் போன் மூலம் கட்டுப்படுத்தி இயக்கலாம். இதில் அஙகீஇக வசதியும் இருந்து இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

AGPS – Assisted Global Positioning System: உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்து அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு மொபைல் இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து அதனை இயக்கினால் சாட்டலைட்டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் மொபைல் போனில் தகவல்களைப் பெறலாம். இணையப் பக் கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட மொபைல் போன்களில் இந்த அஎககு உதவி இல்லாமல் டேட்டா பெறலாம். ஆனால் அதற்கு நேரம் மிக மிக அதிகமாகும். அந்த சிரமத்தை இந்த தொழில் நுட்பம் குறைக்கிறது. ஆனால் உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் தொடர்பு வசதி இருப்பது கட்டாயமாகும்.

EDGE Enhanced Data rates for GSM Evolution: இதனை எனவும் அழைக் கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஜி.பி. ஆர்.எஸ். வகையினைக் காட்டிலும் சற்று மேம்பட்டதாகும். அதனைக் காட்டிலும் சற்று வேகம் அதிகமான பிரவுசிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்தைத் தரும்.

GPRS General Packet Radio Service: இது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட் வொர்க் இணைப்புகளில் இது பயன் படுத்தப்படுகிறது. டேட்டா பரிமாற்றத் தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரை யிலான வேகத்தில் இதன் மூலம் டேட் டாவினைப் பெறலாம். டேட்டாவினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

Series 40 and Series 60: (சிரீஸ் 40 மற்றும் சிரீஸ் 60) S40 or S60: எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இவை மொபைல் போனுக்கான இணைப்புகள். யூசர் இன்டர்பேஸ் எனக் கூறலாம். இவை மொபைல் போனில் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கக் கூடியவை. எஸ் 40 இன்டர்பேஸ் சற்று விலை குறைவான மொபைல் போன்களிலும் எஸ் 60 விலை உயர்ந்த போன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. நோக்கியா அண்மையில் தான் டச் ஸ்கிரீன் போனை அறிமுகப்படுத்தியது. அதில் எஸ் 40 இன்டர்பேஸ் பயன்படுத்தப்படுகிறது. அதன் 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனில் எஸ் 60 டச் அடிப்படையிலான யூசர் இன்டர்பேஸ் பயன்படுத்தப்படுகிறது.

TrackID: பெரும்பாலான சோனி எரிக்சன் மொபைல் போன்களில் இது காணப் படுகிறது. மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் லவுட் ஸ்பீக்கர் அல்லது ரேடியோவில் ஒலி பரப்பாகும் பாடலில் சிறிய பகுதி ஒன்றைப் பதிவு செய்து கொள்ளலாம். பின் அதனை ஒரு சர்வருக்கு அனுப்பி அந்த பாடல் குறித்த தகவல்களைப் பெறலாம். பாடலின் பெயர், பாடலைப் பாடியவர், ஆல்பம், இசையமைத்தவர் போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும். இந்த வசதியைத் தரும் தொழில் நுட்பமே TrackID. இதற்கு மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு தேவை. இதனையே மோட்டரோலா போன்களில் Music ID என அழைக்கின்றனர்.

WiFi : இது வயர் இணைப்பு எதுவுமின்றி நெட்வொர்க் இணைப்பு மேற்கொள்வதைக் குறிக்கிறது. வை–பி இணைப்பு வசதி கொன்ட ரூட்டர்களுடன் மொபைல் போன்கள் இணைப்பு பெறுவதனை இது குறிக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் இது இயக்கத்தில் இருக்கையில் அந்த வகையில் இணைப்பு இயக்கப்பட்ட மொபைல் போன்கள் அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினைப் பெறலாம்.

WiMAX Worldwide Interoperability for Microwave Access: இதுவும் ஒரு வயர்லெஸ் டிஜிட்டல் கம்யூனிகேஷன் சிஸ்டமாகும். வை–பியுடன் ஒப்பிடு கையில் இது இன்னும் சற்று பெரிய இடத்தில் இயங்கும். வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பினை இதனால் வழங்க முடியும். இதனை நிலையான ஒரு இடத்தில் அமைத்தால் 50கிமீ தூரம் வரை இதன் செயல்பாடு இருக்கும். நகர்ந்து செல்லும் வாகனங்களில் இதனை அமைத்துச் செயல்படுத்தலாம். அப்போது 5 முதல் 15 கிமீ வரையிலான தூரத்தில் இது செயல்படும்.

WAP Wireless Application Protocol: இன்டர்நெட் இணைப்பு பெற ஒரு மொபைல் போன் பயன்படுத்தும் அடிப் படை தொழில் நுட்பம். ஜி.பி.ஆர். எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இது எளிமையானதும் அடிப்படையானதும் ஆகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!