Thursday, April 16, 2009

கமல் படத்தில் ரஹ்மான்-ஜப்பானிய இசை கலைஞர் சங்கமம்!

பரத் பாலா இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படமான 19 ஸ்டெப்ஸ்-க்காக ஜப்பானிய இசையமைப்பாளருடன் இணைந்து இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.

கமல்ஹாசன்இ அசின் நடிக்கும் புதிய படம் 19 ஸ்டெப்ஸ். கமல் தனது உன்னைப் போல் ஒருவன் படத்தை 50 நாட்களுக்குள் முடித்துவிடத் திட்டமிட்டிருப்பதால்இ அதன்பிறகு இந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். 

ஹீரோ கமல் என்றாலும் இதில் அசினுக்கு ஜோடியாக ஜப்பானிய   தடானோபோ அசானோ நடிக்கிறார். 

தமிழ்இ இந்திஇ ஆங்கிலம் மற்றும் ஜப்பான் என பன்மொழிப் படமாக உருவாகிவரும் 19 ஸ்டெப்ஸ்-ன் இசையமைப்பாளர் ஆஸ்கர் விருதுபெற்ற நம்ம ஏஆர் ரஹ்மான்தான்.
 

இதில் வரும் ஜப்பானிய கலாசார இசைக்காகஇ அந்நாட்டு சினிமா இசையமைப்பாளர் ஜொய் சய்ஷி இசையமைத்தால் நன்றாக இருக்கும் என ரஹ்மானே விருப்பம் தெரிவித்துள்ளார். தனது விருப்பத்தை இயக்குனர் பரத்பாலாவிடம் ரஹ்மான் சொல்லஇ அதை அவரும் ஏற்றுக்கொண்டார். 

உடனே டோக்கியோவுக்கு ப்ளைட் பிடித்த பரத்பாலாஇ ரஹ்மான் இருவரும் ஜொய்யை சந்தித்தனராம். விஷயம் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஜொய்இ 19 ஸ்டெப்ஸுக்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.


 

ரூ. 50 கோடியில் தயாராகும் இப்படம் கேரளாவின் களறி கலையை மையமாகக் கொண்டு தயாராகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!