Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் – திரை விமர்சனம்

 நீண்ட ஓர் இடை வேளைக்கு பின்னர் விஸ்வரூபம்.
 
 கமல் ஒரு கதக் நடனக் கலைஞர். கமலஹாசனின் மனைவியாய் வரும் பூஜா குமார் மருத்துவம் சார்ந்த அணு ஆராய்ச்சி துறையில் வேலை செய்கிறார். கமலின் நடனப்பள்ளியில் பயிலும் மாணவிதான் ஆண்ட்ரியா. கமலின் மனைவிக்கும் அவருடைய நிறுவன அதிகாரிக்கும் காதல் மலர்கிறது.


அந்த காதலை அடைவதற்கு தனது கணவனிடம் ஏதாவது குற்றத்தை கண்டு பிடிக்க ஒரு டிடெக்டிவை அனுப்புகிறார் பூஜா. அதன் பின்னர் கமல் கதக் நடனக்கலைஞர் மட்டும்  அல்ல, அவர் ஒரு இஸ்லாமியன் என்பதும் தெரிய வந்ததும் கதை சூடு பிடிக்க துவங்குகிறது. அதன் பின்னர் எதிர்களை அடித்து துவம்சம் செய்வதை பார்க்கும் பூஜா தன கணவனிடம் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதை எண்ணி வியக்கிறார். கமல் என்ற கலைஞனின் உழைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.



 இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள்.

ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான். 

முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று காட்சிகள் ஒரே ஒரு காட்சியில் வில்லன் (தலிபான் தலைவர் முல்லா ஒமர்) தமிழ்நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார்.  மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள்.   

ரூ 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதை தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான அல்லவா இது!. நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும்.

இந்த படத்தில் ஆப்கானில் அல்கொய்தா அமைப்பினர் செய்யும் கொடுமைகளையும், அமெரிக்காவின் அட்டூழியங்களையும் நன்றாகவே படம் பிடித்துக் காட்டியுள்ளார். படத்தின் காட்சியமைப்புகளும், ஒலி அமைப்புகளும்  ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது.
 
களத்தூர் கண்ணமாவில் துவங்கிய தேடல் , இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது ,கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!