அஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (ஏகன், பில்லா, மங்காத்தா முன்னையவை.
ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன்
எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போதை, போராட்டம், பேராசை,பெண்கள் என முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று
காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.
சாரம்
கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு, Gangster,
கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில்
இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சி ஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.
முகாமில் பாதுகாப்பு அதிகாரி அகதிகளுக்கு தொந்தரவு கொடுக்க அஜித் தட்டிக் கேட்கிறார். இதனால் வைரக் கடத்தல் கும்பலிடம் அஜித்தை சிக்க வைக்க நினைக்கிறார் அதிகாரி. அந்த சூழ்ச்சியிலிருந்து தப்பிக்கும் அஜித்தும் அவரது நண்பர்களும் பொறுப்பாக வைரத்தை சென்னை பார்ட்டியிடம் - இளவரசு - சேர்க்கிறார்கள்.
பில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை..
படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.
படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.
தனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் - பவளத்துறை நுழைகிறான். ஒரேயொரு இடத்தில் SL14xxx
என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கம் வருகிறது ஆனால்
யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் -
முள்ளு கம்பிகளும் , இராணுவ தளவாடங்களும் கட்டக்படுகிறது ,
அகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே? பிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை? அதன் பின் இந்திய சினிமா தமிழ் பேசப்படுகிறது .
முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள். கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார்.
மதுரை பொண்ணு பாடலின் இசையை கேட்டபோது எங்கோ கேட்ட ஞாபகம் ஜெண்டில்மேன் படத்தில் வரும் ஒட்டகத்த கட்டிக்கோ பாடலில் இசையும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுபடுகிறது.
#ஆசை இல்லை பசி,,
#சாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்
#போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்… ஜெய்க்கிறது. ஜெய்ச்சிட்டா போராளி தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி.
#நல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம்
#நல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம்
#மத்தவங்களோட பயம் நம்ம பலம்
பில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்..
அஜீத் அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார் ஆழமாக, அழுத்தமாகப் பேசுகிறார்.
# பில்லா 2 மொத்தத்தில் பில்லாவின் இரண்டாம் தரம்..
# stylish மன்னன் :)
No comments:
Post a Comment