தொழில்நுட்ப உலகில் பல்வேறு புரட்சிகளை செய்துவரும் சம்சுங் நிறுவனம் இலத்திரனியல் கையுறைகளை அறிமுகம் செய்யவுள்ளது. Samsung Fingers எனும் இந்த ஸ்மார்ட் கையுறைகள் 3 அங்குல அளவுடையதும், மீள்தன்மை கொண்டதுமான Super Emo-LED தொடுதிரையினைக் கொண்டதாக காணப்படுகின்றது. மேலும் 5G இணைய வலையமைப்பினையும் உள்ளடக்கியுள்ளதுடன், 16 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை கொண்டதாக இக்கையுறை தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் சம்சுங் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் இதன் உண்மைத்தன்மை தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை.
No comments:
Post a Comment