Showing posts with label internet. Show all posts
Showing posts with label internet. Show all posts

Tuesday, July 17, 2018

பிரியாவிடை Yahoo Messenger

பிரியாவிடை Yahoo Messenger
RIP Yahoo Messenger (1998-2018)

ஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத்தின் முன்னோடி Yahoo Chat இல் தான் தொடங்கியது. பெண் பெயர் கொண்ட ஐடி மீது மோகித்துக் கவிதை மழையாகப் பொழிவார்கள் 😃 எல்லாம் தமிங்கிலிஷில் தான். கோமணக் கவுண்டரில் இருந்து தமிழ் ரோமியோ என்றெல்லாம் பெயர் வைத்துக் கொட்டம் அடிப்பார்கள். தம்மை ஈர்க்கும் ஐடியை எல்லாம் தள்ளிக்கொண்டு போய் Private Chat Room இல் பந்தி வைத்து விடுவார்கள் 😃😃


இணைய நட்பு மட்டுமல்ல, நட்பைக் காவும் தொழில் நுட்பங்களும்
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறையாவது மாறி விட்டன. Yahoo Chat எப்படி Yahoo Messenger ஆனதோ அதுபோல கலந்துரையாடற் குழுமங்கள், Orkut, Blogger, Google Chat, FaceBook, Twitter என்பதிலிருந்து இப்போது Whatsup யுகம் வரை வந்தாச்சு. எல்லா நட்பு வாகனத்திலும் ஏறி அமர்ந்து பார்த்தாச்சு. எல்லாவற்றிலும் கசப்பானதும், இனிப்பானதுமான அனுபவங்களும் உண்டு.
Orkut இற்கு நிரந்தரப் பிரியாவிடை கொடுத்தோம் அது போலவே இன்றோடு Yahoo Messenger க்கும்.

இனிய பிரியாவிடை Yahoo Messenger 😅😅😅

Monday, November 1, 2010

Facebook அதிவேக ஆக்கிரமிப்பு

உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல் Facebook. குறுகிய காலப் பகுதிக்குள் இணைய உலகையே ஆக்கிரமித்து இணையத்தின் பலமிக்க நிறுவனங்களான Yahoo, Microsoft போன்றவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி நடை போடுகின்றது 6 வயதான facebook. facebook இன் இந்த அபார வளர்ச்சியை சிறிது காலத்துக்கு முன் யாரும் நினைத்துக் கூட பார்திருக்க முடியாது. இன்று facebook வீழ்த்த வேண்டிய ஒரே ஒரு இலக்கு Google மட்டும் தான் (இலகுவான விடயம் அல்ல). ஆனால் சமூக வலைப்பின்னல் (Social Network) துறையில் facebook ஐ வீழ்த்த Google மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை.

உதாரணமாக Orkut, Google Buzz, Google wave. இவற்றின் மூலம் கற்ற பாடங்களுடன் மிகவும் திட்டமிடப்படு Google மேற்கொள்ளவிருக்கும் அடுத்த தாக்குதல் தான் GoogleMe (Google அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய சமூக வலைப்பின்னல் தளம்). இதுவும் facebook இன் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.



இது இவ்வாறிருக்க facebook நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதுடன் தேவையற்ற வசதிகள் அகற்றப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்பொழுது அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இணையத்தளங்களுக்கான Like Button இணையப்பாவனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அம்சமாகும். அத்துடன் பயனாளார் கணக்குகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தனித்துவத்தை பேணும் நடவடிக்கைகளும் நோ்த்தியாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.


facebook பாவனை பற்றிய முக்கிய புள்ளிவிபரங்கள்.

  • 500 000 000 (500 million) க்கு மேற்பட்ட பாவனையாளா்கள் facebook ஐ பயன்படுத்துகின்றனர்.
  • ஒவ்வொரு பாவனையாளரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.
  • பாவனையாளா்கள் ஒவ்வொரு மாதமும் 700 000 000 000 (700 billion) க்கும் அதிக நிமிடங்களை facebook இல் செலவிடுகின்றனர்.
  • 900 000 000 (900 million) க்கும் அதிக குழுக்கள், பக்கங்கள் (pages, groups, events and community pages) முதலியவற்றில் இணைந்து செயற்படுகின்றனார்.
  • ஒரு பாவனையாளர் சராசரியாக 80 குழுக்கள், பக்கங்கள் (pages, groups, events and community pages) முதலியவற்றில் இணைந்துள்ளார்.
  • ஒவ்வொரு பாவனையாளரும் சராசரியாக 90 விடயங்களை (web links, news stories, blog posts, notes, photo albums, etc.) ஒவ்வொரு மாதமும் பகிர்கின்றனர்.
  • ஒவ்வொரு மாதமும் 30 000 000 000 (30 billion) க்கும் அதிக விடயங்கள் பகிரப்படுகின்றது.
  • தமிழ் உட்பட 70ற்கு மேற்பட்ட மொழிகளில் facebook ஐ பயன்படுத்த முடியும்.
  • 60 000 இற்கும் அதிக Server கள் facebook இன் தடையற்ற இயங்கத்திற்காக பயன்படுத்தப் படுகின்றது

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!